Published : 26 May 2014 08:09 AM
Last Updated : 26 May 2014 08:09 AM

பிரதமர் பதவியேற்பு விழாவில் 4 ஆயிரம் பேர்

மக்களவைத் தேர்தல் வெற்றியில் மட்டுமல்ல, பதவியேற்பு விழா விலும் நரேந்திர மோடி புதிய சாதனை படைக்கிறார்.

முன்னாள் பிரதமர்கள் சந்திர சேகர் (1990), வாஜ்பாய் (1998) ஆகி யோர் குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிப்புற வளாகத் தில் பதவியேற்றுக் கொண்டனர். அந்த வரிசையில் இப்போது நரேந் திர மோடியும் இணைகிறார் வாஜ்பாய் பதவியேற்பு விழாவின் போது சுமார் 1300 விருந்தினர்கள் பங்கேற்றனர். இதுதான் அதி கபட்ச சாதனையாக இருந் தது. தற்போது மோடியின் பதவி யேற்பு விழாவில் சுமார் 4000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இது புதிய சாதனை யாக இருக்கும். பதவியேற்பு விழாவில் முதல் முறையாக சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் மக்க ளவை, மாநிலங்களவையின் 777 உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர் களுக்கு அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது. இவர்கள் தவிர 350க்கும் மேற்பட்ட செய்தியாளர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.

மழை பெய்தால்…

டெல்லியில் திங்கள்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. பதவியேற்புவிழா திறந்தவெளி மைதானத்தில் நடை பெறுகிறது. ஒருவேளை மழை பெய்தால் குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் ஹாலில் விழா நடைபெறும். இந்த அரங்கில் 500 பேர் மட்டுமே அமர முடியும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் துறை செயலர் ஒமிடா பால் தெரிவித்தார்.

எல்சிடி திரையில் ஒளிபரப்பு

மோடி பதவியேற்பு விழாவினை பொதுமக்கள் காணும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் எல்சிடி திரைகளை டெல்லி பாஜகவி னர் பொருத்தியுள்ளனர்.

தலைவர்களுக்கு பிரணாப் அளிக்கும் விருந்தில் ‘செட்டிநாடு சிக்கன்’

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவுக்கு திங்கள்கிழமை வருகை தரும் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பாஜக தலைவர் நரேந்திர மோடி பிரதமராக திங்கள்கிழமை பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோக்கே, நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸாய், வங்கதேசம் நாடாளுமன்றத் தலைவர் ஷிரின் சவுத்ரி ஆகியோர் வருகை தருகின்றனர். இவர்களுக்கும், பிரதமராகப் பதவியேற்கவுள்ள மோடி மற்றும் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்கிறார்.

இந்த விருந்தில் தமிழகத்தின் இறால் சுக்கா, செட்டி நாடு சிக்கன், குஜராத்தின் ‘கெலா மெதி நு சாக்’, ‘தோக்லா’, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரி பிந்தி, பஞ்சாபின் தாஸ் மகானி, மேற்கு வங்கத்தின் போடோல் டோர்மோ ஆகிய உணவு வகைகள் பரிமாறப்பட வுள்ளன. விருந்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் குடியரசுத் தலைவரின் செயலாளர் ஓமிதா பால் கூறுகையில், “விருந்துக்கு வரும் வி.வி.ஐ.பி.க்கள் மாளிகையின் விருந்தினர் அறைகளில் சிறிது நேரம் இளைப்பாற ஏற்பாடு செய்துள்ளோம். 14 அறைகளைக் கொண்ட இந்த விருந்தினர்கள் தங்கும் கட்டிடம் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x