Published : 05 Apr 2020 06:57 AM
Last Updated : 05 Apr 2020 06:57 AM

வைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையை வெளிப்படுத்த மோடி அழைப்பின்படி இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் மின்விளக்குகள் அணைப்பு

கரோனா வைரஸ் ஒழிப்பில் நாட்டு மக்கள் ஒற்றுமையை வெளிப் படுத்தும் விதமாக, இன்று இரவு 9 மணிக்கு அனைத்து வீடுகளிலும் மின்விளக்குகள் அணைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதியில் இருந்து வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் முழு அடைப்பு அமலில் உள்ளது.

கரோனா வைரஸை கட்டுப் படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி தொலைக் காட்சியில் உரையாடினார். அவர் பேசும்போது, ‘‘முழு அடைப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லை. எனவே, மக்கள் மன்னிக்க வேண்டும். கரோனா வுக்கு எதிராக மக்கள் ஊரடங்கை சிறப்பாக கடைபிடித்து வரு கின்றனர். அதற்காக நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

மேலும், ‘‘இந்தியாவின் ஒருங் கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் நம்முடைய மன வலிமையை, ஒற்றுமையை வெளிப்படுத்தும் வித மாகவும் 5-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் அணைத்து வீடுகளிலும் மின்விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும். 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து, வீடு களில் 4 மூலைகளிலும் அகல்விளக்கு, மெழுகுவத்தி ஏற்றி வையுங்கள். பால்கனிகளில் விளக்குகளை ஏற்றுங்கள். செல் போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள்’’ என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து, அகல்விளக்கு, மெழுகுவத்திகளை ஏற்றிவைக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

பாதிப்பு வராது

இதற்கிடையில், ஒரே நேரத்தில் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைப்பதால் மின் பகிர்மான கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும்என்று சிலர் அச்சம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்துமத்திய மின் பகிர்மானக் கழகம் மற்றும் மாநில மின்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வீடுகளில் மின் விளக்குகள் மட்டும்தான் அணைக்கப்பட வேண்டும். தவிர ஏசி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் வழக்கம் போல இயங்கலாம். எனவே, மின் பகிர்மான கட்டமைப்பில் எந்த பாதிப்பும் வராது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

தமிழ்நாடு மின் துறை அதிகாரி கள் கூறும்போது, ‘‘ஞாற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகள் மட்டும்தான் அணைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். மேலும், நகராட்சி, மாநகராட்சி என எந்தப் பகுதியிலும் தெரு விளக்குகள் அணைக்கப்படாது’’ என்று விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x