

புதுடெல்லி: போக்குவரத்து விபத்து தரவுகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் கூறியிருப்பதாவது:
நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில் 1.98 லட்சம் பேர் உயிரிழந்தனர். போக்குவரத்து விபத்துகளில், சாலை விபத்துக்கள், ரயில்வே விபத்துகள் இரண்டும் அடங்கியுள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டில் 4.91 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றன. இந்த எண்ணிக்கை 2024-ம் ஆண்டில் 4.95 லட்சமாக அதிகரித்தது. விபத்து உயிரிழப்புகளில் உ.பி. (27,071) முதல் இடத்திலும், தமிழகம் (20,390) 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா (19,475) 3-வது இடத்திலும் உள்ளது. இவ்வாறு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.