Published : 16 Mar 2020 09:42 AM
Last Updated : 16 Mar 2020 09:42 AM

கோவிட் - 19 வைரஸை தடுக்க பசுவின் கோமியம் உதவும்: இந்து மஹாசபா யோசனை

டெல்லியின் மந்திரி மார்க் பகுதியில் அகில இந்திய இந்து மஹாசபா சார்பில் நேற்று கோவிட் -19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மஹாசபாவின் உறுப்பினர்களும், அதன் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு யாகம் மற்றும் பூசையுடன் துவங்கிய விழாவில் அகில இந்திய இந்து மஹாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி கூறுகையில், ‘‘மாமிசத்திற்காக கால்நடைகள் கொல்லப்படும் போது இந்த கோவிட் 19 வைரஸ் உருவாகிறது. இந்த வைரஸை எதிர்கொள்ள பசு கோமியத்தை அருந்துவதுடன், அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். இளம் பசுவின் கோமியத்தை அன்றாடம் இரண்டு வேளை அருந்துவதால் இந்த வைரஸால் பாதிக்கப்படாமல் தப்ப முடியும். இதனால் தான் பசுவை கோமாதாவாக இந்துக்கள் வணங்குகிறார்கள். இந்த கோமியத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளும் இறக்குமதி செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார்.

விழாவின் இறுதியில் பஞ்சதிரவியப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதை அனைவரும் ‘ஜெய்கோமாதா கீ ஜெய்’ எனக் கோஷமிட்டபடி ஒரே சமயத்தில் அருந்தி மகிழ்ந்தனர். விழாவில் சைவ உணவுடன் சில சிறப்பு மூலிகைகளும் பறிமாறப்பட்டன. ஆர்.ஷபிமுன்னா


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x