Last Updated : 13 Mar, 2020 03:35 PM

 

Published : 13 Mar 2020 03:35 PM
Last Updated : 13 Mar 2020 03:35 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மடகாஸ்கருக்கு 600 டன் அரிசி: இந்திய அரசு வழங்கியது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மடகாஸ்கருக்கு இந்தியா சார்பாக 600 டன் அரிசி மற்றும் நிவாரணப் பொருட்கள் கப்பலில் எடுத்துச்சென்று இந்திய கப்பற்படை அந்நாட்டு அதிகாரிகளிடம் வழங்கியது.

கடந்த ஜனவரி மாதம் மடகாஸ்கரில் ஒரே வாரத்தில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. வெள்ளத்திலும் நிலச்சரிவினாலும் 16,000 பேர் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 30 பேர் பலியாகினர். இந்திய அரசு பாதிக்கப்பட்ட மடகாஸ்கர் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. தற்போது இந்திய கடற்படை 600 டன் அரிசியை அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மடகாஸ்கரில் கடந்த ஜனவரியில் பெய்த கடும் மழைகாரணமாக அத்தீவின் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நிலச்சரிவிலும் வெள்ளத்திலும் வீடுகளை இழந்த நிலையில் வாடும் அந்நாட்டு மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

மடகாஸ்கர் மக்களுக்கு உதவும் வகையில் இந்த வாரம் கடல் வழியாக 600 டன் அரிசியை எடுத்துச் சென்ற இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கப்பல் மடகாஸ்கரின் போர்ட் அன்ட்சிரானானாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தது.

இதற்கான அதிபாரபூர்வ நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மடகாஸ்கர் வெளியுறவு அமைச்சர் தெஹிந்திராசனரிவெலோ டிஜகோபா மற்றும் மடகாஸ்கர் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பாக மடகாஸ்கருக்கான இந்திய தூதர் அபய் குமார் மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரி சி.டி.ஆர் அபிஷேக் பதக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு கடற்படை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x