Published : 08 Mar 2020 05:12 PM
Last Updated : 08 Mar 2020 05:12 PM

‘‘நான் ஆரிஃபா’’ - பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்ட காஷ்மீர் பெண்

பிரதமர் மோடியிடன் ட்விட்டர் பக்தகதில் காஷ்மீரைச் சேர்ந்த பெண் கலைஞரான ஆரிஃபா பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை விடுத்த அறிவிப்பின்படி," தனது சமூகவலைத்தள கணக்கை மக்களை ஈர்த்த 7 பெண்களிடம் ஒப்படைக்கப் போகிறேன்.

இவர்களின் அனுபவங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்" எனத் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை 7 சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த பெண்களும் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


பிரதமர் மோடியிடன் ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் பெண் ஆரிஃபா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘காஷ்மீரின் பாரம்பரிய கைத்தொழில்கள் அங்குள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடும் என்பதால், அவற்றுக்கு புத்துயிர் அளிப்பது குறித்து நான் சிந்தித்து வருகிறேன்.

பெண் கலைஞர்களின் நிலையை நான் பார்த்திருப்பதால், நம்தா கைத்தொழிலை மீண்டும் கொண்டுவருவதற்கான பணிகளை நான் தொடங்கியுள்ளேன்.

நான் காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃபா, இங்கு எனது வாழ்க்கைப் பயணத்தை அறிந்து கொள்ளலாம். ’’ எனத் தெரிவித்துள்ளார். தனது வீடியோ குறிப்பையும் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x