Published : 08 Mar 2020 03:21 PM
Last Updated : 08 Mar 2020 03:21 PM

‘‘ஹலோ நான் சினேகா மோகன்தாஸ்’’ -  பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் தமிழக பெண் பெருமிதம்

பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை விடுத்த அறிவிப்பின்படி," தனது சமூகவலைத்தள கணக்கை மக்களை ஈர்த்த 7 பெண்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். இவர்களின் அனுபவங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்" எனத் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை 7 சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் தினத்துக்குத் தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, " நான் ஏற்கனவே கூறியதுபோல், நான் சமூக வலைத்திலிருந்து இருந்து வெளியேறிவிட்டேன். இன்றைய நாள் முழுவதும், 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த தகவல்களை என்னுடைய சமூக வலைத்தளம் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள், உரையாடுவார்கள்.

இந்தியாவில் பல்வேறு சாதனைகளைச் செய்த பெண்கள் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். இந்த 7 பெண்களும் பல்வேறு பிரிவுகளில் மிகச்சிறந்த செயல்களைச்ச செய்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், ஆசைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். தொடர்ந்து மகளிர் தினத்தை இன்று கொண்டாடுவோம், சாதனைப் பெண்களிடம் இருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்

அவர் சமூகவலைதள கணக்கை ஒப்படைத்த பெண்களில் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸும் ஒருவர்.

ஃபுட் பேங்க் என்ற அமைப்பின் மூலம் ஏழை மக்களுக்கு உணவளித்து வரும் இவர் பிரதமர் மோடியின் சமூவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘உணவு குறித்த சிந்தனையை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். நமது ஏழைமக்களுக்காக செயலாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.

ஹலோ நான் சினேகா மோகன்தாஸ், வீடு இல்லாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற பழக்கம் கொண்ட எனது தாயின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவள். இதன் காரணமாக புட்பாங்க் இந்தியா என்ற முயற்சியை தொடங்கினேன்.

எனக்கு ஆர்வமாக இருப்பதைச் செய்யும்போது எனக்குள் ஒரு உத்வேகம், அதிகாரம் கிடைக்கிறது. எனது சக குடிமக்களும், குறிப்பாக பெண்களும் முன் வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டுமென விரும்புகிறேன்.
அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும். இதன் மூலம் நாம் பசி இல்லாத உலகை உருவாக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x