Published : 04 Mar 2020 06:51 AM
Last Updated : 04 Mar 2020 06:51 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மனு

புதுடெல்லி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவ காரம் தொடர்பாக ஐ.நா. அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்து ஏராளமானோர் உயிரிழந்தனர்.

நாட்டில் பரவலாக இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்று வந்த போதிலும், இந்த சட்டத்தை திரும் பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லெட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக கருதப்படும் ஐ.நா. அமைப்பானது, இந்தியாவில் உள்ள ஒரு சட்டத்துக்கு எதிராக இங்குள்ள உச்ச நீதிமன்றத்தையே நாடியிருப் பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன்பாக, இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிச்செல் பேச்லெட் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட் டெரஸும் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு இந்தியா கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுற வுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து அம்சங்களுக்கும் இணங்கியே குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனித உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்தியா வின் உள்நாட்டு விவகாரம். இதில், எந்த வெளி நாடோ அல்லதுஅமைப்போ தலையிட உரிமை கிடையாது. அதேபோல், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்பு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x