Published : 26 Feb 2020 06:50 AM
Last Updated : 26 Feb 2020 06:50 AM

போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் மிரட்டியவர் கைது

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தின்போது துப்பாக்கியால் போலீஸ் அதிகாரியை மிரட்டும் இளைஞர் ஷாருக் (சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்திருப்பவர்). படம் பிடிஐ

புதுடெல்லி

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சிஏஏ எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மோதலின்போது ஆயுதம் இல்லாத போலீஸ் அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி ஜாப்ராபாத் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை, துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் குறிபார்த்து, மிரட்டிய வீடியோ வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்துள்ள அந்த நபர், ஆயுதம் இல்லாத போலீஸ் அதிகாரியை நோக்கி துப்பாக்கியால் குறி வைக்கிறார். அவருக்கு 33 வயது இருக்கும் என்று தெரியவந்தது. இதையடுத்து இந்த வீடியோவை ஆய்வு செய்த போலீஸார் தற்போது அந்த நபரை கண்டறிந்து கைது செய்தனர்.

அவரது பெயர் ஷாருக் என்று தெரியவந்துள்ளது. அவர் மீது எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறையின்போது போலீஸ் அதிகாரியை மிரட்டிய அவர் பின்னர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளார். துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரியை பின்னால் செல்லுமாறும் ஷாருக் மிரட்டியுள்ளார். தன்னிடம் ஆயுதம் இல்லை என்று அந்த போலீஸ் அதிகாரி கைகளை உயர்த்திக் காண்பிக்கிறார். பின்னர் அந்த இளைஞர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அப்போது அருகிலிருந்த நபர்கள் சிதறி ஓடினர். போராட்டம் நடத்திய சிலர், அந்த போலீஸ் அதிகாரி மீது கல்வீசித் தாக்குவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

டெல்லியின் ஷதாரா பகுதியைச் சேர்ந்தவர் ஷாருக் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களி்ல வைரலாகி வருகிறது - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x