

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குல் நடத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்களும் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜீவ் சிங்(வயது 36) என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 2-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள மெந்தர் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நேற்று தொடங்கிய துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது.
தவறவிடாதீர்