Last Updated : 10 Feb, 2020 07:57 AM

 

Published : 10 Feb 2020 07:57 AM
Last Updated : 10 Feb 2020 07:57 AM

மீத்தேன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்: தலைவாசலில் சர்வதேச கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கடலோரத்தில் இருக்கும் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டங் களால் விவசாயம் பாதிக்கப்படு வதை தடுக்க அப்பகுதி பாதுகாக் கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல மாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக் கல் நாட்டு விழா நேற்று நடைபெற் றது. விழாவில், தமிழக தலைமைச் செயலர் சண்முகம் வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

விழாவில், ரூ.196.36 கோடி மதிப் பில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி, ரூ.262.16 கோடியில், ஒருங்கிணைந்த பூங்கா வுக்கான குடிநீர் திட்டம் ஆகிய வற்றுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், விவசாய பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:

விவசாயத்தில், கால்நடை வளர்ப்பு முக்கிய துணைத் தொழி லாக உள்ளது. கால்நடைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தேவை அதி கரித்து, அவை ஏற்றுமதியும் செய் யப்படுகிறது. எனவே, கால்நடை வளர்ப்பு லாபகரமான தொழிலாக மாறிவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த கிராமப்புற மக்களுக்கான, விலை யில்லா கறவை மாடு வழங்கும் திட்டம், ஆடு வழங்கும் திட்டம், புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களால் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் 20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி, கால்நடை களின் பெருக்கம் 21 சதவீதம் அதி கரித்துள்ளது. தமிழகம் கோழிகள் உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடத்தையும், செம்மறி ஆடு வளர்ப்பில் 5-வது இடமும், வெள் ளாடு வளர்ப்பில் 7-வது இடமும் பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா 1,100 ஏக்கர் பரப்பில் உருவாகிறது. இதில், நவீன கால்நடை மருத்துவமனை, நாட்டு மாடுகள், நாட்டின ஆடுகள் உள்ளிட்டவற்றை பாதுகாத்து, இனப்பெருக்கம் செய்யும் பிரிவு, பால் மற்றும் பால் பொருட்கள் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட பிரிவுகள், பால் பொருட் களை சந்தைப்படுத்துதல் போன்ற வற்றுக்கான மையமும் அமைக்கப் படும். மேலும், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு உள்ளிட்டவற்றுடன் இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு இணையாக

அமெரிக்காவின் பபல்லோ நகர் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் வசதிகளை இங்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி பூங்காவுக்கென காவிரி நீரை கொண்டு வர தனித் திட்டமும் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டி, மத் திய அரசு விருது கொடுக்கிறது. இது தமிழக மக்கள் அனைவருக்குமே பெருமை தரக்கூடியது. ஆனால், எதிர்க்கட்சி தலைவருக்கு இதில் பெருமை கிடையாது. ‘தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை அடிப்பேன்’ என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.

ஒரு கதையில், மந்திரக் கண் ணாடியைப் பெற்ற முதியவர் ஒருவர், அதன் மூலம் கிடைத்த 3 வரங்களைக் கொண்டு, தனது ஊரையே சொர்க்கமாக மாற்றினார்.

ஆனால், எதிர் வீட்டில் இருந்த பொறாமைக்காரர், அதே மந்திரக் கண்ணாடியை வாங்கி, அவரது சொந்த வளர்ச்சிக்கு பயன்படுத்த முனைந்தார். அதிலும் தோல்வி யடைந்தார். சிலருக்கு எது கிடைத் தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது.

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்துள்ளோம். அதிமுகவைச் சேர்ந்த நாங்கள் உழைக்கப் பிறந் தவர்கள். மக்கள் நலனுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந் துள்ளோம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், இது மக்கள் விரோத அரசு, வீட்டுக்கு அனுப்ப வேண் டும் என்கிறார். அரசு மீது அவதூறு களைப் பரப்பி வருகிறார்.

திமுக ஒப்புதல்

நெடுவாசலில் மீத்தேன் திட்டம் கொண்டு வர திமுகதான் ஒப்பு தல் கொடுத்தது. ராஜஸ்தான் பாலை வனத்தில் மீத்தேன் கண்டுபிடிக்கப் பட்டபோது, டெல்டா மாவட்டங்களி லும் மீத்தேன் எடுக்கும் திட்டத் துக்கு 1996-ம் ஆண்டு திமுகதான் ஒப்புதல் கொடுத்தது. அதனை டி.ஆர்.பாலுவே ஒப்புக் கொண்டுள் ளார். ஆனால், அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தியது நாங்கள்தான்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் அறி வித்தோம். மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும், அதனை மாநில அரசு அனுமதித்தால்தான் நிறைவேற்ற முடியும்.

டெல்டா பகுதிகள் கடல் நீர் சார்ந்த பகுதியாக இருக்கிறது. கடல் நீர் நிலத்துக்குள் புகுந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் இதைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தஞ்சாவூர், திருவாரூர் நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் அடங்கிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். அந்த வகையில் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப் படும். நானும் ஒரு விவசாயி என்ற முறையில் இந்த அறி விப்பை வெளியிடுகிறேன்.

சட்ட வல்லுநர்களை கலந்தாலோ சித்து, இதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படும். ஹைட்ரோகார்பன் உட் பட, விவசாயத்தைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழகத் தில் அனுமதிக்க மாட்டோம். இவ் வாறு முதல்வர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவைத் தொடர்ந்து, பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். கண்காட்சி யில் இருந்த அரங்குகளுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இணைந்து சென்று, அங்கிருந்த வேளாண் கருவிகள், விவசாய விளை பொருட்கள், நாட்டு மாடுகள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டதோடு, விளக் கங்களையும் கேட்டறிந்தனர்.

விழாவில், கால்நடை பராமரிப் புத்துறை முதன்மை செயலர் கோபால், வேளாண் உற்பத்தி ஆணையர் முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் திட்டங்கள், வேளாண் பெருவிழா குறித்து பேசினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங் கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, ஜெயக் குமார், சண்முகம், சரோஜா, உதய குமார், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள், மாணவர்கள், பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நன்றி கூறினார். வேளாண் பெருவிழா கண்காட்சி இன்றும் (10-ம் தேதி), நாளையும் (11-ம் தேதி) நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x