கேரளாவில் கரோனா வைரஸ்: கண்காணிப்பில் மூவாயிரம் பேர்

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
Updated on
1 min read

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 'மாநில பேரிடர்' எச்சரிக்கையை வாபஸ் பெற்ற ஒரு நாள் கழித்து, 3,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் கண்காணிப்பில் இருப்பதாக கேரள அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹானிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அறிவிக்கப்பட்டது அனைத்துமே திருச்சூர், ஆலப்புழா மற்றும் காசர்கோட் மாவட்டங்களில் இருந்து அறிவிக்கப்பட்டவைதான். பாதிக்கப்பட்ட மூன்றுபேரில் இருவர் வுஹான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்கள் ஆவர். மூன்றாவது மாணவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட கடந்த பிப்ரவரி 3 அன்று மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டது.

கேரளாவில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக புதிய கரோனா நோய்த்தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று கேரள அரசு வெள்ளிக்கிழமை 'மாநில பேரிடர் எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.

'மாநில பேரிடர் எச்சரிக்கை' திரும்பப் பெறப்பட்டது குறித்து சுகாதார அமைச்சர் கே.கே.அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கண்காணிப்பில் உள்ள 3,114 பேரில், 3,099 பேர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கும், 45 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர், ஏனெனில் அவர்களுக்கு வைரஸின் சிறிய அறிகுறிகள் உள்ளன.

இதுவரை, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு 330 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 288 பேரின் மாதிரிகளில் வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

சில தினங்களுக்கு முன்பு மாநில பேரிடர் எச்சரிக்கை அறிவித்திருந்தோம். கடந்த சில நாட்களாக புதிய கரோனா நோய்த்தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று 'மாநில பேரிடர் எச்சரிக்கையை வாபஸ் பெறப்பட்டிருப்பினும் அரசு தனது பாதுகாப்பைக் குறைக்கவில்லை, (28 நாள்) தனிமைப்படுத்தப்பட்ட காலம் தொடரும். தற்போது 3000 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

வூஹானில் இருந்து மாநிலத்திற்கு திரும்பிய 72 பேரில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள், சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தபிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தவறவிடாதீர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in