Published : 25 Aug 2015 09:36 AM
Last Updated : 25 Aug 2015 09:36 AM

ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 செயற்கைக்கோள் நாளை மறுநாள் மாலை 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், தற்போது ஜிசாட்-6 என்ற தகவல் தொழில்நுட்ப பயன் பாடு தொடர்பான செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 27-ம் தேதி விண் ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய் துள்ளது. ஜிஎஸ்எல்வி வரிசையில் இது 9-வது ராக்கெட். அதேபோல ஜிசாட் வரிசையில் இது 25-வது செயற்கைக்கோள் ஆகும்.

ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் உருவாக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே 2 முறை கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாக 2001, 2003, 2004, 2007 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 5 செயற்கைக்கோள் கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

தற்போது, தகவல் தொழில் நுட்ப பயன்பாட்டுக்காக செலுத்தப் பட உள்ள ஜிசாட்-6 செயற்கைக் கோள் ரூ.250 கோடியில் உருவாக் கப்பட்டு இருக்கிறது. இதன் மொத்த எடை 2,500 கிலோ ஆகும். இதில் எஸ்-பேண்ட் தொழில்நுட்ப முறை இடம்பெற்றுள்ளது. செயற்கைக் கோளில் மிகப் பெரிய அள விலான 'ஆண்டனா' பொருத்தப்பட் டுள்ளதால், மிகச் சிறிய தொலை பேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத் தில் இருந்து வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே, தகவல் தொடர்புத் துறைக்கு அதிலும் குறிப்பாக, பாது காப்புத்துறைக்கு இந்த செயற் கைக்கோள் பேருதவியாக இருக் கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிசாட்-6 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4.52 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத் திலிருந்து விண்ணில் செலுத்தப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x