Last Updated : 31 Jan, 2020 07:17 PM

 

Published : 31 Jan 2020 07:17 PM
Last Updated : 31 Jan 2020 07:17 PM

நரேந்திர மோடி தன்னை வளர்த்துக் கொள்ள மகாத்மா காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்தினார்: ராமச்சந்திர குஹா தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி தன்னை வளர்த்துக் கொள்ள மகாத்மா காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார், என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பிரதமராவதற்கு முன்பு காந்தியை விரும்பினாரா மோடி என்று கேள்வி எழுப்பினார் ராமச்சந்திர குஹா.

காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அகமாதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமச்சந்திர குஹா, காந்தி இருந்திருந்தால் நிச்சயம் சிஏஏ-வை எதிர்த்தேயிருப்பார் என்றார்.

சபர்மதி ஆஸ்ரம அறக்கட்டளை நிர்வாகி கார்த்திகேயா சாராபாய்க்கு அறிவுரை வழங்கியபோது, மோடி பிரதமரான பிறகு ஆசிரமம் தன்னை மோடியிடமிருந்து தொலைவுப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் காந்திய நிறுவனங்களான சபர்மதி ஆஸ்ரமம் மற்றும் குஜராத் வித்யா பீடம் ஆகியவை சிஏஏவை எதிர்த்திருக்க வேண்டும் என்றார்.

“2014க்குப் பிறகே மோடியிடமிருந்து ஆசிரமம் தொலைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டும், பிரதமராவதற்கு முன்பாக காந்தியை அவர் நேசித்தாரா என்ன? தன்னை வளர்த்துக் கொள்ள மகாத்மா காந்தியின் பெயரை துஷ்பிரயோகம் செய்தார் மோடி.

காந்தி உயிருடன் இருந்தால் சிஏஏவை எதிர்த்தேயிருப்பார், ஆகவே காந்தியை தவறாக மேற்கோள் காட்டி மோடி ஏமாற்றுகிறார்.

உச்ச நீதிமன்றம் சிஏஏவுக்கு சம்மதித்தாலும் அது தடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அகிம்சா வழியைத்தான் கடைபிடிக்க வேண்டும். நம் அரசியல் வர்க்கம் வன்முறையை அடக்க வேண்டும் ஆனால் இந்த விஷயத்தில் நம் அரசியல் தலைமைகளின் பாதை துரதிர்ஷ்டவசமானது.

இந்தியாவின் இரண்டு முக்கியமானவர்களின் பேச்சில் தொனிக்கும் வன்முறையைப் பாருங்கள். ஷாஹின் பாக் போராட்ட பெண்களைப் பற்றி நம் உள்துறை அமைச்சரின் கூற்று மோசமானது. எந்த ஒரு நாகரிகமான ஜனநாயகத்திலும் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் இப்படிப் பேசுவதால் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் அதை விடவும் மோசமாக பேசி வருகின்றனர்.

2018-ல் அகமதாபாத் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பதவி கிடைத்த போது வேண்டாம் என்று கூறக் காரணம், ஆளும் பாஜக என்னை அனுமதிக்கவில்லை” என்றார் ராமச்சந்திர குஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x