Last Updated : 22 Aug, 2015 03:09 PM

 

Published : 22 Aug 2015 03:09 PM
Last Updated : 22 Aug 2015 03:09 PM

பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிமுக்கு சொத்துகள்: இந்தியாவிடம் புதிய ஆதாரம்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசிப்பதற்கான உளவுத் துறையின் முக்கியக் கோப்புகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாகிஸ்தான் குழுவிடம் அளிக்க உள்ளார். அந்த கோப்புகள் குறித்து தி இந்து (ஆங்கிலம்) அணுகி உள்ளது.

அந்த ஆவணத் தொகுப்பு விவரத்தின்படி, கராச்சியில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பில்வாலா ஜர்தாரி வீடு அருகே கடந்த 2013ல் தாவூத் இப்ராஹிம் வீடு வாங்கியுள்ளார்.

1993ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவ முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதற்கான முக்கிய கோப்பு, உளவுத் துறைக்கு கிடைத்துள்ளது.

டெல்லியில் ஆகஸ்ட் 23-24-ம் தேதிகளில் நடைபெறும் இந்திய - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் உயர்மட்ட பேச்சுவார்த்தையில், உளவுத் துறையின் ஆவணத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் தரப்பிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.

பூட்டோ வீடு அருகே உள்ள சொத்தைத் தவிர, பாகிஸ்தானில் மொத்தம் 9 இடங்களில் தாவூத் இப்ராஹிமுக்கு சொத்துக்கள் இருப்பதற்கான ஆதார கோப்புகள் உளவுத் துறையிடம் சிக்கி உள்ளது. மேலும், அவரது பெயரில் 6 முகவரிகளும் உள்ளன.

இதில், ஓரு முகவரி பாகிஸ்தானின் ஹைதூன் மருத்துவமனையின் அருகே இருப்பதாகவும் அந்த மருத்துவமனையில்தான், தாவூத் இப்ராஹிம் தனக்கு தேவையான மருத்துவ சேவைகளை பெற்று வருவதாகவும் அந்த ஆவணத் தகவல் கூறுகிறது.

பாகிஸ்தானின் மோயின், தர்கா சாலை, க்ளிஃப்டான், கராச்சியில் உள்ள பாதுகாப்பு மாளிகை சாலை, மார்பாகா சாலையில் உள்ள ஐஎஸ்ஐ-க்கு சொந்தமான வீடு, இஸ்லாமாபாத்தில் கதவு எண்.22 மற்றும் 29 உள்ளிட்ட முகவரிகளில் தாவூதுக்கு சொந்தமாக இருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

© தி இந்து ஆங்கிலம்

| தமிழில் க.பத்மப்ரியா|

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x