Last Updated : 26 Jan, 2020 12:19 PM

 

Published : 26 Jan 2020 12:19 PM
Last Updated : 26 Jan 2020 12:19 PM

குடியுரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக வந்த ஏ-சாட் ஏவுகணை, சின்னூக், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

நாட்டின் 71-வது குடியரசு தின விழாவில் டெல்லி ராஜபாதையில் நடந்துவரும் அணிவகுப்பில் முதல்முறையாக டிஆர்டிஓ அமைப்பின் சார்பில் செயற்கைக் கோள் பாதுகாப்பு ஏவுகணை இடம் பெற்றிருந்தது.

அதேபோல் சின்னூக் ஹெலிகாப்டர்கள், அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

71-வது குடியரசுதினம் நாடுமுழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் படைகளின் அணிவகுப்புகளை அவர் பார்வையிட்டார். இந்த முறை குடியரசு தின விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகப் பிரேசில் அதிபர் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ வந்திருந்தார்.

அப்பாச்சி ஹெலிகாப்டர் அணிவகுத்த காட்சி

மேலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் படைகளின் அணிவகுப்பைக் கண்டு ரசித்தனர். ஏராளமான மக்கள் வந்திருந்திருந்து முப்படைகள் அணிவகுப்பையும், பல்வேறு மாநிலங்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த முறை அணிவகுப்பில் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும், எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணை இடம் பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் டிஆர்டிஓ அமைப்பு மிஷன் சக்தி எனும் திட்டத்தை வெளியிட்டு, முதன்முதலில் ஏ-சாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துபார்த்தது.

பூமியின் குறைந்த நீள்வட்டப் பாதையில் இருக்கும் எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது ஏ-சாட் ஏவுகணையாகும். நொடிக்கு 11.கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது ஏ-சாட். எதிரிநாட்டுச் செயற்கைக்கோளை மிகமிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும்.

அதேபோல சமீபத்தில் விமானப்படையில் சேர்க்கப்பட்ட சின்னூக், அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.

சி்ன்னூக் ஹெலிகாப்டர்கள் விமானப்படைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லுதல், மீட்புப்பணி போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டதாகும். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் போர்க்காலத்தில் பயன்படக்கூடியவையாகும். இந்த ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கியால் தாக்குதல், சிறியரக ராக்கெட்டுகளை ஏவு முடியும். ஹெலிகாப்டர் முகப்பில் அதிநவீனத் துப்பாக்கி, ரேடார் கருவிகள் உள்ளிட்டவை கொண்ட அதிநவீன ஹெலிகாப்டராகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x