Published : 07 Jan 2020 04:35 PM
Last Updated : 07 Jan 2020 04:35 PM

ஜே.என்.யு. விவகாரம்: மாணவர்கள் சங்கத் தலைவர் ஐஷே கோஷ், 19 பேர் மீது வழக்குப் பதிவு

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஐஷே கோஷ் மற்றும் 19 பேர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜனவரி 4ம் தேதி 1 மணியளவில் பாதுகாவலர்களைத் தாக்கியதாகவும் கணினி சர்வர் அறையை சூறையாடியதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜே.என்.யு வளாகத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி புகாரை பதிவு செய்ய, ஜனவரி 5ம் தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

இதே தினத்தில்தான் மாலையில் முகமூடி அணிந்த குண்டர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்கினர், இதில் மாணவர் சங்கத் தலைவர் ஐஷே கோஷ் மண்டை உடைந்தது. சுமார் 28 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியப்பெற்றுள்ளது, ஆனால் இதுவரை கைது இல்லை. முகமூடிக் குண்டர்கள் தாக்குதல் நடத்திய போது போலீஸார் அங்கு இருந்ததாகவும் அவர்களைப் போலீஸார் தடுக்கவில்லை என்றும் பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில்தான் முகமூடிக் குண்டர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக மதியம் பாதுகாப்புக் காவலர்களைத் தாக்கியதாகவும் சர்வர் அறையைச் சூறையாடியதாகவும் ஐஷே கோஷ் மற்றும் 19 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x