Published : 02 Jan 2020 04:25 PM
Last Updated : 02 Jan 2020 04:25 PM

வாஹ்.. மோடி வாஹ்...!  இத்தனை நாட்கள் எங்கு சென்றிருந்தீர்கள்?: சித்தராமையா கிண்டல்

தும்கூரு மற்றும் பெங்களூருவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தந்ததையடுத்து முன்னாள் கர்நாடக முதல்வர்களான சித்தராமையா மற்றும் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோர் மோடியைப் கடுமையாக விமர்சனம் செய்தனர். வரிசையாக தொடர் ட்வீட்களை சித்தராமையா வெளியிட்டுள்ளார்.

பல விதங்களில் மோடி தோல்வியடைந்து வருகிறார், ஆனால் பிரச்சாரம் என்றால் உடனே தலைதூக்குகிறார் என்று சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தது நீங்கள் வரவில்லை, எங்கள் மாநில விவசாயிகள் உதவி கேட்டு கதறிய போது நீங்கள் தலைகாட்டவில்லை. ஆனால் உங்கள் அரசியல் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டுமென்றால் உடனடியாக வந்து விடுகிறீர்கள். பிரச்சாரம் என்றால் நீங்கள் அப்பாவி கன்னட மக்களை நினைவு கொள்கிறீர்கள், வாஹ் மோடி வாஹ்!!

மத்திய அரசின் நிதிக்காக கர்நாடகா காத்திருந்தது ஆனால் போதிய வெள்ள நிவாரணம் வரவில்லை, ஜிஎஸ்ட் வருவாய் இழப்புக்கான இழப்பீடு வரவில்லை,

எங்கள்மக்களை முட்டாள் ஆக்க முயற்சிப்பதற்கு முன்பு கர்நாடகா மக்களுக்குச் சேர வேண்டிய பங்கு பற்றி இவர்களுக்குத் தெரிய வேண்டும். எப்போது கொடுப்பீர்கள் என்பதும் தெரிய வேண்டும்..

25 எம்.பி.க்கள் பாஜக எம்.பி.க்கள், அரசும் பாஜக அரசு எனவே மக்கள் இரட்டை இன்ஜின் என்று நம்பினர், ஆனால் பாஜக பிரதிநிதிகள் இன்ஜினை ஆஃப் செய்து விட்டனர். ஆனால் உங்கள் தனிமனித விநோதப்போக்கின் ரசிகர்களாகி விட்டனர். ஏன் உங்களைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்?

உங்கள் பொய்களைக் கண்டு மக்கள் அலுத்துப் போய்விட்டனர், இன்று நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் கலசா பந்தூரி யோஜனா, பெலாகவி எல்லை விவகாரம், கன்னடம் துலு, கோதவா மொழியில் தேர்வுகள்... என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது, இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன என்பதை எதிர் நோக்குகிறோம்.” என்று தொடர் ட்வீட்களில் கேலி செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி, “மோசமான பொருளாதாரச் சூழலுக்கு என்ன காரணம்? மத்திய ஆட்சியின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளே. ஜிடிபி மற்றும் நாட்டின் வளர்ச்சியை விழுங்கி விட்டதோடு தவறான கொள்கைகள் மாநிலத்தைப் பாதிக்கிறது.

மத்தியிலிருந்து கர்நாடகாவுக்கு வர வேண்டிய 5.44% பங்கு இன்னமும் வந்தபாடில்லை. மத்திய அரசு மாற்றான் தாய் மன நிலையில் நடந்து கொள்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x