Last Updated : 01 Jan, 2020 08:31 PM

 

Published : 01 Jan 2020 08:31 PM
Last Updated : 01 Jan 2020 08:31 PM

'வன்முறையின் ஆசான்கள் எங்களைக் குறை கூறுவதா? - ஆம் ஆத்மி, காங்கிரஸ் மீதான பிரகாஷ் ஜவடேகரின் குற்றச்சாட்டுக்கு சிசோடியா பதிலடி

தலைநகர் டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டி விட்டது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களே என்று பாஜக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர்தான் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணம். இரு கட்சிகளும் வன்முறைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாகத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்தன.

ஜாமியா வன்முறையில் காங்கிரஸின் ஆசிப் கான், ஆம் ஆத்மியின் அமானத்துல்லா ஆகியோர் மக்களைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். சீலம்நகர் வன்முறையில் காங்கிரஸ் கட்சியின் சவுத்ரி அகமட், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. இஷ்ரக் கான், மற்றும் கவுன்சிலர் அப்துல் ரஹ்மான் ஆகியோரது பங்கு உள்ளது. தார்யாகஞ்ச் வன்முறையில் காங்கிரஸின் மஹ்மூத் பிரச்சாவின் கை இருக்கிறது, இவர்கள் விசாரணையை எதிர்கொண்டிருக்கின்றனர்.

சிஏஏ பர்க்காவையும் மசூதிகளில் லவுட் ஸ்பீக்கர்களையும், முஸ்லிம்களின் தொப்பி, தாடி ஆகியவற்றுக்கும் தடை விதிக்கும் போக்கில் செல்லும் என்று வன்முறையைத் தூண்டும் விதமாக அமானத்துல்லா கான் பேசினார், ஆனால் சிஏஏவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்று விமர்சித்தார்.

இதற்குப் பதில் அளித்த ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோடியா, “ஆம் ஆத்மி வன்முறைகளை முழுக்க முழுக்க எதிர்த்தது. எந்தக் கட்சி வன்முறைகளில் இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். வன்முறையின் ஆசான்கள் நாட்டு மக்களைத் திசைத்திருப்புவதற்காக மற்றக் கட்சிகள் மேல் பாய்கின்றனர்.

பாஜக திரும்பத் திரும்ப கோடு விழுந்த பிளேட் போன்று சொன்னதையே சொல்லி வருகின்றனர், அதே பழைய கோடு விழுந்த பிளேட்தான் இப்போதும். டெல்லி தேர்தல்களை தேய்ந்த ரெக்கார்டுகள் மூலம் எதிர்கொள்ள முடியாது என்பதை ஜவடேகர் உணர வேண்டும். உண்மையான நலன்களான கல்வி போன்றவற்றை வைத்துத்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்பதை ஜவடேகர் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று சாடினார்.

காங்கிரஸ் கட்சியும் ஜவடேகரின் குற்றச்சாட்டை மறுதலித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x