Published : 26 Dec 2019 08:44 AM
Last Updated : 26 Dec 2019 08:44 AM

நெருப்பு வளைய சூரிய கிரகணம் தொடக்கம்: வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தல்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது. சவுதி அரேபியாவின் கடல் பகுதி மற்றும் ஊட்டியில் பகுதி நேர சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது.

இன்று தோன்றும் சூரிய கிரகணம் இந்தியாவில் காலை 9.13 வரை தோன்றும். தமிழகத்தில் முழு சூரிய கிரகண நெருப்பு வளையம் 9.34 மணிக்கு தோன்றும். சென்னை மற்றும் புதுச்சேரியில் 9.34 மணிக்கும், நாகர்கோவில் மற்றும் சேலம் பகுதிகளில் 9.31 மணிக்கும், மண்டபத்தில் 9.33 மணிக்கும் சூரிய கிரகணம் தோன்றும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கான கண்ணாடியை பயன்படுத்தி பார்க்கலாம் எனவும், தொடர்ச்சியாக கிரகணத்தை பார்க்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

அடுத்த முழு சூரிய கிரகணமானது உத்திரகாண்ட், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் 2020 ம் ஆண்டு ஜூன் 21 ம் தேதி தோன்றும். தமிழகத்தில் 2031 ம் ஆண்டு மே 21 அன்று தென்படும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரியும்.

முழு சூரிய கிரகணம் 11.05 மணிக்கு நிறைவடையும். முழு சூரிய கிரகணம் 3.12 நிமிடங்கள் இருக்கும்.

சூரிய கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உணவு அருந்துவது உட்பட நம் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

சந்திரனை விட சூரியன் 400 மடங்கு பெரியது, ஆனால் ஒரே அளவு போல் கண்களுக்குத் தெரியக் காரணம் சந்திரன் 400 மடங்கு நெருக்கமாக வருகிறது என்பதால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x