Last Updated : 19 Aug, 2015 06:41 PM

 

Published : 19 Aug 2015 06:41 PM
Last Updated : 19 Aug 2015 06:41 PM

எண்கள் சொல்லும் சேதி: டெல்லி... பலாத்காரத்தின் தலைநகரம்

குற்ற எண்ணிக்கைகளின் அடிப்படையில், வரலாற்றில் முதன்முறையாக டெல்லி, இந்தியாவின் பலாத்கார தலைநகராக மாறியிருக்கிறது.

பதிவு செய்யப்படும் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மொத்தப் பெண்களின் எண்ணிக்கையோடு, வழக்குகளின் எண்ணிக்கை விகிதம் கணக்கிடப்படும்போது, அது கடந்த ஆண்டைக் காட்டிலும் மற்ற மாநிலங்களை விட டெல்லியில் அதிகரித்திருக்கிறது.

பெண்களின் எண்ணிக்கை மற்றும் பலாத்கார எண்ணிக்கை விகிதம், கடந்த வருடத்தில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குவாலியர், ஜபல்பூர் ஆகிய நகரங்களில் அதிகமாக இருந்தது. இந்த வருடம், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த தகவல்படி, டெல்லியே முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் இருந்து தகவல்களைப் பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 2013-ல் 1,441 ஆக இருந்த பலாத்காரங்களின் எண்ணிக்கை, 2014-ல் 1,813 ஆக உயர்ந்திருக்கிறது. மும்பையைப் பொறுத்தவரையில், பலாத்காரம் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. 2013-ல் இருந்து 2014 வரை, குற்றங்கள் 391-ல் இருந்து 607 ஆக அதிகரித்திருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் சேர்த்து, உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான கூட்டு பலாத்காரங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

நாடு முழுக்க ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமேயானால், கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கெதிராக குற்றங்களின் எண்ணிக்கை 3.3 லட்சங்கள். இதை ஒரு லட்சத்துக்கு 56 குற்றங்கள் எனவும் கூறலாம். டிசம்பர் 2012 ல் நடந்த கூட்டு பலாத்காரத்துக்குப் பின்னர், 2012 - 2013க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஆனால் திரும்பவும் 2013- 14க்கு இடையில் அவை குறைந்திருக்கிறது என்கிறது காவல்துறை.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குற்றவாளிகளை அடையாளம் தெரிந்து பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து 86 சதவிகிதமாக இருக்கிறது.

புதிய தகவல்கள் அனைத்தும், 'டெல்லி, குற்றங்களின் தலைநகராக இருக்கிறது' என்பதை நிறுவுகின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தின் குற்றச்சாட்டுக்களின் கீழ், கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை, நாட்டின் மற்ற பகுதிகளில் சில சதவீதம் அதிகரித்திருக்க, டெல்லியில் மட்டும் ஏறக்குறைய இரண்டு மடங்கு (ஒரு லட்சம் பேருக்கு 856 குற்றங்கள்) அதிகரித்திருக்கிறது.

கவனத்துக்குக் கொண்டுவரப்படும் குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள்தொகையின் விகிதத்தில் இந்தூருக்கு அடுத்ததாக டெல்லி இருந்தாலும், இந்தூரின் குற்ற விகிதம் கடந்த இரண்டு வருடங்களில் குறைந்த அளவே அதிகரித்திருக்கிறது.

டெல்லியின் இந்த திடீர் குற்ற அதிகரிப்புக்கு, திருட்டு, கொள்ளை, வழிப்பறி மற்றும் வாகன திருட்டு ஆகியவை முக்கியக் காரணம். எல்லாப் பெரிய நகரங்களின் அனைத்து விதமான குற்றங்களோடு பார்க்கும்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது டெல்லி. 2014ம் ஆண்டில் இந்தியாவில் 34,000 கொலைகள் நடந்திருக்கின்றன; 66,000 கலவரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சாதி, மதம், அரசியல் சார்ந்தவை அல்லாத பிற காரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x