Published : 05 Dec 2019 12:30 PM
Last Updated : 05 Dec 2019 12:30 PM

தமிழ் வளர்ச்சிக்கான நிறுவனத்தை இந்திக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடான செயல்: தங்கம் தென்னரசு

தமிழ் வளர்ச்சிக்காக இருக்கக்கூடிய நிறுவனத்தை இந்திக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடான செயல் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்றுவிப்பதற்கு திமுக சார்பாக கடும் கண்டனத்தை தெரிவி்த்துள்ளோம்

அதற்கு, தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளார்

அதில், இந்த உலகத் தமிழாராய்ச்சி பயிற்ச்சி நிறுவனத்தில் 2014-ம் ஆண்டிலிருந்து அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து இந்தி கற்பித்தல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என விளக்கமளித்துள்ளார்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னுடைய தலைவியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரை காட்டிக் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலிருந்தே இந்தி மொழி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் பாண்டியராஜன் கூறுகிறார்

அப்படி 2014 முதல் இந்தி வகுப்பு தொடங்கினால் 2018, 2019, 2020-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தி வகுப்பு தொடர்பாக ஒரு புதிய அரசாணையை அறிவிப்பாக வெளியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்க வேண்டிய ஒரு விஷயம் என்றால் நடப்பு ஆண்டுகளில் பணம் ஒதுக்குவதாக அமைச்சர் பாண்டியராஜன் ஏன் சொல்லியுள்ளார் என்பது குழப்பமாக உள்ளது

அதற்காக வெளியிட்டுள்ள அரசாணையில் பிற மொழி என்று அரசாணையில் சொல்லியிருப்பதில் இந்தி இருக்கிறது என்று ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை .

இந்த கேள்விகளுக்கும் அமைச்சர் பண்டியரஜன் பதில் சொல்லவேண்டும்

இந்தியை ஒளித்து வைத்துக் கொண்டு பிற மொழிகள் என்ற போர்வையில் இந்தியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வரக்கூடிய முயற்சியை அதிமுக அரசு எடுத்துக் கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இந்த நிறுவனத்தில் இந்தி வந்துவிடக்கூடாது என்று அண்ணா போராடினார். ஆனால் அண்ணா பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பில் அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு ஆட்சியும் கட்சியும் நடத்துவதற்கு தமிழ் வளர்ச்சிக்காக இருக்கக்கூடிய நிறுவனத்தை இந்திக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடான செயல்" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x