Last Updated : 05 Aug, 2015 10:03 AM

 

Published : 05 Aug 2015 10:03 AM
Last Updated : 05 Aug 2015 10:03 AM

2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு: போட்டியை அதிகரிப்பதற்காகவே புதிய தொலைத்தொடர்புக் கொள்கை - நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

புதிய தொலைத்தொடர்புக் கொள்கை-1999, இத்துறையில் போட்டியாளர்களை அதிகரிப் பதற்காகவும், வெளிப்படைத் தன்மைக்காகவும் வகுக்கப் பட்டது என தொலைத்தொடர்புத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட் டோருக்கு எதிரான 2ஜி ஊழல் வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தெரிவித்தார்.

இதுதொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் வாதிட்டதாவது:

1999- புதிய தொலைத் தொடர்புக் கொள்கையானது இத்துறையில் அதிக போட்டி யாளர்களை உருவாக்கவும், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் கொண்டுவரப் பட்டது. நாட்டில் உலகத் தரம் வாய்ந்த தொலைத்தொடர்புத் துறை உள்கட்டமைப்பை மேம் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதைக் கொண்டு வந்தது.

அதற்கு முன்பாக, தொலைத் தொடர்புத் துறையை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் முன் வரவில்லை. அவர்களால் போதிய நிதியை ஏற்படுத்த முடியவில்லை. இது அரசைக் கவலையடையச் செய்தது.

வேறெதுவும் பயன்படாத நிலையில், தொலைத்தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுக்க புதிய நோக்கி லான கொள்கை நமக்கு தேவைப் பட்டது. போட்டி மிகுந்த சூழல், அனைவருக்கும் சமமான வாய்ப்பு போன்றவற்றை நோக்க மாகக் கொண்டு புதிய கொள்கை வகுக்கப்பட்டது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

ஆ.ராசா உள்ளிட்ட 16 பேருக்கு எதிரான 2ஜி முறைகேடு வழக் கில் தற்போது இறுதிவாதம் நடைபெறுகிறது. அடுத்தகட்ட விசாரணை வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x