Published : 18 Nov 2019 08:32 AM
Last Updated : 18 Nov 2019 08:32 AM

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்றார்

அயோத்தி, ரஃபேல் விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்கு களில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகோய், உச்ச நீதிமன்றத் தின் 46-வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பொறுப்பேற்றார். இதன்மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, இந்த உயர் பதவியை எட்டிப் பிடித்த முதல் நபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி தனது கடைசி பணி நாளை நிறைவு செய்த அவர் நேற்று முறைப்படி ஓய்வுபெற்றார்.

கோகோய் தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய தலைமை நீதிபதியின் செயல் பாட்டை கண்டித்து பத்திரிகை யாளர்களுக்கு பேட்டி கொடுத்த 4 மூத்த நீதிபதிகளில் இவரும் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

மேலும் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு இவர் பாலியல் புகாரிலும் சிக்கினார். ஆனாலும், அதிலிருந்து அவர் மீண்டார். இதுபோன்ற சர்ச்சைகள் அவருடைய நீதித்துறை பணியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. மாறாக, பல்வேறு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள் ளார். இதன்மூலம் அவர் என்றென் றும் நினைவுகூரப்படுவார்.

சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்ட லாம் என்றும் தீர்ப்பு வழங்கினார். இதுபோல, ரஃபேல் ரக போர் விமான கொள்முதல் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடி தலைமை யிலான அரசுக்கு நற்சான்று வழங் கும் வகையிலான தீர்ப்பையும் வழங்கி உள்ளார். மேலும் தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உட்பட்டதுதான் என்றும் அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x