Published : 11 Nov 2019 05:57 PM
Last Updated : 11 Nov 2019 05:57 PM

ஸ்ரீநகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற தால் ஏரியின் பரப்பளவு சுருங்குகிறதா?

ஸ்ரீநகர், பிடிஐ

சுற்றுலாப் பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற தால் ஏரி அதன் பரப்பளவில் சுருங்குவதாக ஏற்பட்டுள்ள கவலைகளை அடுத்து ஜம்மு காஷ்மீர் அரசின் 10 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி, தால் ஏரி, இதன் சுற்றுப்புற பகுதிகளை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க பரிசீலித்து வருகிறது.

அசலாக அது 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது, சுற்றுச்சூழல் நாச காரணிகள் மற்றும் ஆக்ரமிப்புகளினால் 10 சதுர கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதாக இந்திய ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் 2017-ல் தெரிவித்தது.

மேலும் ஏரியின் கொள்திறன் 40% வரை சுருங்கியதோடு, அதன் தண்ணீரின் தரமும் பெரிய அளவில் சீரழிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா.

இந்நிலையில் உலக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும், உலகப்புகழ் பெற்ற தால் ஏரியினை சூழலிய பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க 10 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு அறிவிக்கை ஒரு மாத காலத்திற்குள் இறுதி செய்யப்படவுள்ளது.

ட்ரெட்ஜிங் நிறுவனம் மேலும் தன் மதிப்பாய்வில் தெரிவிக்கும் போது கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகள் தால் ஏரியில் கலந்து நீரின் தூய்மை பாழ்பட்டுள்ளது என்று தெரிவித்துளது. மேலும் ஆக்ரமிப்புகளால் நீர்சுழற்சியும் புதிய நீர் வரத்தும் குறைந்துள்ளது என்கிறது.

மேலும் ஏரியின் ஆழமும் சில இடங்களில் குறைந்துள்ளது. 800-900 படகு வீடுகளாலும் ஏரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது ட்ரெட்ஜிங் நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x