Published : 05 Nov 2019 10:43 AM
Last Updated : 05 Nov 2019 10:43 AM

ஆதித்ய தாக்கரேவை மகாராஷ்டிரா முதல்வராக சித்தரித்து பேனர்: மீண்டும் சிவசேனா தலைவர் வீட்டு வாசலை அலங்கரித்ததால் சர்ச்சை

மும்பை

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவை மகாராஷ்டிரா முதல்வராக சித்தரித்து மீண்டும் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா கட்சிகளிடையே கடந்த 10 நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது.

முன்னதாக அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. 288 இடங்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், இரு கட்சிக்குனே தனிப் பெரும்பான்மை இல்லை. இரு கட்சி களுக்கும் இடையே மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் (மாதோஸ்ரீ - வீட்டின் பெயர்) ஆதித்ய தாக்கரேவை முதல்வராக சித்தரித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் 'எனது எம்.எல்.ஏ., எனது முதல்வர்' (My MLA, My Chief Minister) என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.சிவசேனா கட்சியின் முக்கியப் பிரமுகர் ஹாஜி ஹலீம் கான் இந்த போஸ்டரை வைத்துள்ளார்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை மும்பை மாநகராட்சி, உத்தவ் தாக்கரே இல்லத்தின் வெளியே மகாராஷ்டிரா முதல்வர் ஆதித்ய தாக்கரே மட்டுமே என்று வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றியது.’இந்நிலையில் இன்று மீண்டும் அப்படியொரு பேனர் வைக்கப்பட்ட்டிருக்கிறது.இது மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனா 5 ஆண்டு ஆட்சியில் சுழற்சி முறையில் 2.5 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி கோருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துபூர்வமாக இதற்கான உறுதிமொழியை பாஜக அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x