Published : 16 Oct 2019 07:04 AM
Last Updated : 16 Oct 2019 07:04 AM

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவிடம் விசாரணை: மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து வருமான வரி அதிகாரிகள் கேள்வி

ப‌ரமேஸ்வரா

இரா.வினோத்

பெங்களூரு

வருமான வரித் துறை விசாரணைக்கு ஆஜரான கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவிடம் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் கேள்வி எழுப் பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முன்னாள் துணை முதல் வரும், காங்கிரஸ் மூத்த தலைவருவரு மான பரமேஸ்வராவின் வீடு, அலுவலகம் மற்றும் மருத்துவக் கல்லூரி உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கப் பணமும், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததற் கான ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி பரமேஸ்வராவின் உதவியாளர் ரமேஷ் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். வருமான வரித் துறை அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதி வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கர்நாடக இளைஞர் காங்கிரஸார் வருமான வரித் துறையினரைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பரமேஸ்வரா நேற்று பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, சித்தார்த்தா கல்வி நிறுவனத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்த விதம், அதில் மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து 4 அதிகாரிகள் கொண்ட குழு அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும் 189 மாணவர்களிடம் ரூ.50 லட்சம் வரை கட்டணம் வசூலித்தது தொடர்பாகவும் விசாரித்ததாக தெரிகிறது.

இதற்கு மாணவர் சேர்க்கையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் கவுன்சலிங் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்தது என்றும் பரமேஸ்வரா தரப்பில் பதில் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த பரமேஸ்வரா கூறும்போது, “அதிகாரிகள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்திருக்கிறேன். எனது தரப்பில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளேன். என் தந்தை காலத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம். இந்த சொத்துகளை நான் அரசியலுக்கு வந்த பிறகோ, துணை முதல்வரான பிறகோ சேர்க்கவில்லை. மாணவர் சேர்க்கையில் எவ்வித முறை கேடும் நடைபெறவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x