Published : 16 May 2014 07:16 AM
Last Updated : 16 May 2014 07:16 AM

வதோதரா, வாரணாசி தொகுதிகளில் வெற்றிவிழா கொண்டாட மோடி திட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் போட்டி யிடும் வதோதரா மற்றும் வாரணாசி தொகுதிகளில் வெற்றி விழா கொண்டாட திட்டமிட்டுள்ளார் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி.

குஜராத் மற்றும் உபி என இரு மாநிலங்களில் உள்ள 2 தொகு திகளில் போட்டியிட்ட மோடி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான இன்று தனது சொந்த மாநிலத்திலேயே இருக்க முடிவு செய்துள்ளார். இவ்விரு தொகுதி களிலும் வெற்றி பெறுவது உறுதி என நம்பும் மோடி, இன்று மாலை வதோதராவிலும் பிறகு அகமதாபாதிலும் வெற்றி விழா வைக் கொண்டாட திட்டமிட்டுள் ளார்.

மறுநாள் சனிக்கிழமை காலை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்க இருக்கும் ஆட்சிமன்றக்குழு கூட் டத்தில் கலந்து கொள்ள இருக் கிறார் மோடி. கட்சியின் மிகவும் முக்கிய குழுவாகக் கருதப்படும் இதன் கூட்டத்தில் அடுத்து அமைய இருக்கும் தேசிய ஜனநாய கக் கூட்டணி ஆட்சி உட்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து மதியம் வாரணாசிக்குச் சென்று வெற்றிவிழா கொண்டாட இருப்ப தாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்தத் தகவலை உபி காவல்துறை அதிகாரிகள் 'தி இந்து'விடம் உறுதி செய்ய மறுத்து விட்டனர். காரணம், உபியின் தலை மைச் செயலாளரான ஜாவேத் உஸ்மானி, உபியில் சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு தேர்தல் முடிவுகள் வெளியான பின் எந்தவிதமான வெற்றி ஊர்வலங் களையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு முழுமையாக செயல்படுத்துவது கடினம் எனவும் கருதப்படுகிறது.

வாரணாசியிலும் தனக்கு வெற்றி உறுதி என நம்பும் மோடி, அதற்கான சான்றி தழை தாமே நேரில் சென்று பெற திட்டமிட்டுள்ளார். அப்போது, வேட்பு மனு தாக் கல் செய்தபோது நடந்தது போல பிரம்மாண்ட ஊர்வலம் நடத்த வும் திட்டமிட்டுள்ளதாகக் கருதப் படுகிறது. இத்துடன் பிரச்சாரத்தின் போது தமக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தர மறுத்த கங்கை ஆர்த்தி பூஜையிலும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

நாட்டிற்கு அதிகமான பிரதமர் களை தந்த மாநிலம் என்பதாலும் உபியில் மிக அதிகமாக 80 தொகு திகள் இருப்பதாலும் வாரணாசி யில் போட்டியிட்டார் மோடி. இவர் போட்டியிட்டு வெல்ல இருப்ப தாகக் கருதப்படும் இரு தொகுதி களில் ஏதாவது ஒன்றை மோடி ராஜினாமா செய்தாக வேண்டும். எனவே, வதோதராவில் ராஜினாமா செய்து விட்டு வாரணாசியின் எம்பியாக தொடர முடிவு செய்து இருப்பதாக நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை உபியை ஆளும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என ஒரு கருத்து நிலவி வந்தது. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மோடி, மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டு பிறகு உபியையும் பிடிப்பார் என பாஜகவினர் நம்புகின்றனர்.

வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அதன் உபி சட்டசபை உறுப்பினரான அஜய் ராய் போட்டியிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x