Last Updated : 07 Jul, 2015 05:17 PM

 

Published : 07 Jul 2015 05:17 PM
Last Updated : 07 Jul 2015 05:17 PM

46 பேரை பலிகொண்ட ‘வியாபம்’ வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை: உயர் நீதிமன்றத்தில் மத்தியப் பிரதேச அரசு மனு

‘வியாபம்’ முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தை மத்தியப் பிரதேச அரசு அணுகியுள்ளது. உடனடியாக விசாரிக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, இம்மனு இன்று விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘வியாபம்’ முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நெருக்கடி அளித்து வந்தன. இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் மர்ம மரணம் தொடர்பாக மக்களிடை யேயும் அதிருப்தி எழுந்தது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மறுத்து வந்தார்.

இதனிடையே, இதுவரை 46 பேரை பலிகொண்ட இவ்வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சமூக ஆர்வலர்கள் ஆஷிஷ் சதுர்வேதி, டாக்டர் ஆனந்த் ராய், பிரசாந்த் பாண்டே ஆகியோர் உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு, மனுவை விசாரணைக்கு ஏற்பதா கவும், வியாபம் தொடர்பான பிற மனுக்களுடன் சேர்த்து வரும் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தது.

இதுதொடர்பான தகவல் வெளி யானதும், மக்களின் உணர் வுக்கு மதிப்பளித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக் கப்போவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் அவர் கூறும்போது, “ஜனநாயகத்தில் மக்களின் உணர்வு முக்கியமானது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு கோரும்படி நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுப்பேன். அரசின் செயல்பாடுகள் எவ்வித சந்தேகங்களுக்கும் அப்பாற் பட்டதாக இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் விசாரணை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இதுவரை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும். தற்போது சிபிஐ விசாரணை தேவை யாக உள்ளது. திடீர் மரணங்கள் உட்பட அனைத்துக் கோணங்களி லும் சிபிஐ விசாரணை செய்யும். இம்முறைகேட்டில் காங்கிரஸ் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறானவை” என்றார்.

அரசு மனு

முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி. கவுரவ் கூறும்போது, “சிபிஐ விசாரணைக்கு உத்தர விடும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எம்.கான்வில்காரிடம் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளோம். உயர் நீதிமன்றம் இம்மனுவை 8-ம் தேதி (இன்று) விசாரிக்கும். உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரேஷ் பூஷண் தலைமையிலான சிறப்பு தனிப்படை கண்காணிப்பின் கீழ், மத்தியப் பிரதேச அரசின் சிறப்பு அதிரடிப்படை இவ்வழக்கை திறமையாக விசாரித்து வருகிறது. ஆனால், அண்மைக்கால துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மற்றும் பல்வேறு தரப்பு கோரிக்கை களை அடுத்து அரசு, சிபிஐ விசாரணையைக் கோருகிறது என மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது” என்றார்.

மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசார ணைக்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது. அதேசமயம், சிபிஐ விசாரணை கோரி திக்விஜய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு, மத்தியப் பிரதேச ஆளுநரை நீக்கக் கோரும் மனு, ஆம் ஆத்மி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஆகியவை நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா கூறும் போது, “உயர் நீதிமன்றத்தை அணுகும் சிவராஜ் சிங் சவுகானின் முடிவு, உண்மையை மறைப்பதற் கான மற்றொரு முயற்சி. பாதிக் கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நியாயமான விசாரணை நடத் தப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை என்பதுதான் தீர்வு” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x