Published : 01 Oct 2019 04:32 PM
Last Updated : 01 Oct 2019 04:32 PM

அரசின் கொள்கை தவறுகளை விமர்சிப்பதை அடக்கினால் தவறுகள்தான் இன்னும் அதிகமாகும்: ரகுராம் ராஜன் கருத்து

புதுடெல்லி

அரசின் கொள்கை தவறுகளை விமர்சிப்பதை அடக்கினால், அந்த தவறுகள் இன்னும் அதிகமாகும், ஆட்சியாளர்கள் விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்

பொருளாதார வல்லுநர் நானி பால்கிவாலா தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
" அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதை அடக்கினால், அந்த தவறுகள் இன்னும் அதிகமாகும். ஆட்சியில் இருப்பவர்கள் மீதுவிமர்சனங்கள் எழுந்தால் அதை அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனங்கள்தான், அரசின் கொள்கை தவறுகளை திருத்தச் செய்யும்.

ஒவ்வொரு விமர்சனத்துக்கும் அரசு நிர்வாகிகளிடம் இருந்து தொலைபேசி அழைப்புவந்து விமர்சனத்தை திரும்பப்பெறுங்கள் என்று வந்தால், அல்லது ஆளும் கட்சியின் சமூகவலைதள வசைப்படை, போன்றவை விமர்சனத்தை அடக்கி ஒடுக்கவே செய்யும்.
அனைத்தும் இதமான சூழலில் இருக்கிறது, ஆட்சி நடக்கிறது என்று அரசு நம்புவைக்கிறது, ஆனால், நீண்டகாலத்துக்கு கடினமான உண்மைகளை மறைத்துவிட முடியாது.

சிலநேரங்களில் சந்தேகமில்லாமல் சில விமர்சனங்கள் அதாவது பத்திரிகையில் தவறான தகவல்கள் அடிப்படையில், தனிப்பட்ட ரீதியான தாக்குதல்கள் வரக்கூடும். நான் பணியில் இருந்தபோது எனக்கும் கூட அந்த அனுபவம் இருந்திருக்கிறது. வெளிப்படையாக வரும் விமர்னங்களை அரசு அடக்குவது என்பது, அவர்களே அவர்களுக்கு செய்யும் மோசமான சேவையாகும் "
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x