Published : 30 Sep 2019 11:14 AM
Last Updated : 30 Sep 2019 11:14 AM

உலக, தேசியத் தரத்துக்கு உயர்த்த செயல் திட்டம் தேவை: ஐஐடிக்களுக்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி

ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை தேசிய அளவிலும், உலகத் தரத்துக்கும் உயர்த்துவதற்கு சிறப்பான செயல் திட்டத்தைத் தயார் செய்யுங்கள் என ஐஐடி தலைவர்களுக்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கருத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஐஐடி தலைவர்களிடம் வலியறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மனிதவளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐஐடிக்களின் தரத்தை உலக அளவிலும், தேசிய அளவிலும் உயர்த்துவதற்குச் செயல்திட்டம் தயாரிக்க கவுன்சில் கூட்டத்தில் பேசப்பட்டது. ஆராய்ச்சித் திறன், செயல் திறனை அதிகப்படுத்தப் பணியாற்றுவது முக்கியமானது. அதனால்தான் ஒவ்வொரு ஐஐடியும் தரத்தை உயர்த்தச் செயல் திட்டம் கேட்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

லண்டனில் இருக்கும் தி கியூஎஸ் (Quacquarelli Symonds), டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் (Times Higher Education) இரு ஆய்வு நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக வெளியிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த சர்வேயில் முதல் 100 இடங்களில் இந்திய ஐஐடிக்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், எம்ஐடி ஆகியவை முன்னனியில் உள்ளன. ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகியவை முதல் 200 பல்கலைக்கழங்களில் இருக்கின்றன. முதல் 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் எந்த இந்தியக் கல்வி நிறுவனமும் இடம் பெறவில்லை.

இதையடுத்து அனைத்து ஐஐடி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் தலைவர்களை சமீபத்தில் அழைத்துப் பேசிய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் தரவரிசையில் குறைந்தமைக்கும், பல்கலைக்கழங்கள் தரவரிசையில் இடம் பெறாமல் போனதற்கும் காரணத்தைக் கேட்டறிந்தார். குறிப்பாக ஹைதராபாத் ஜேஎன்யு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை போன்றவை கூட இடம் பெறவில்லை.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x