Published : 28 Sep 2019 07:58 AM
Last Updated : 28 Sep 2019 07:58 AM

கர்நாடகாவில் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல்; 15 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது

இரா.வினோத்

புதுடெல்லி

கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளுக் கான இடைத்தேர்தல், வருகிற டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.

கர்நாடகாவில் முந்தைய குமார சாமி தலைமையிலான மஜத ,காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக 17 எம்எல்ஏக்கள் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந் ததை தொடர்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது.

முன்னதாக குமாரசாமி கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற் காத 14 காங்கிரஸ், 3 மஜத‌ எம்எல்ஏக் கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு கட்சிகளின் கொறடாக்க‌ளும் பேரவைத் தலைவரிடம் மனு அளித்தனர்.

அதன்பேரில், காங்கிரஸைச் சேர்ந்த பைரத்தி பசவராஜ், முனிரத்னா, நாகராஜ் உள்ளிட்ட‌ 12 எம்எல்ஏக்களையும், மஜதவை விஸ்வநாத், கோபால் கவுடா உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களையும் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த 15 எம்எல்ஏக் களும் 2023-ம் ஆண்டுவரை (தற் போதைய‌ சட்டப்பேரவையின் பத‌விக் காலம் முடியும் வரை) சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடவும் தடை விதித்தார். இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த‌னர்.

இம்மனு நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடகாவில் காலி யாக உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளில், 2 தொகுதிகள் நீங்க லாக 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.

இதையடுத்து, இடைத்தேர் தலை ஒத்திவைக்கக் கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை யடுத்து, இடைத்தேர்தல் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இதுதொடர் பாக நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட் டுள்ளதாவது:

கர்நாடகாவில் ஒத்திவைக்கப் பட்ட 15 சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும். நவம்பர் 19-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை நவம்பர் 21-ம் தேதிக் குள் திரும்பப் பெறலாம். வாக்குகள் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு கள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x