Published : 27 Sep 2019 03:26 PM
Last Updated : 27 Sep 2019 03:26 PM

சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தில் உதவுபவர்களுக்கு சிறப்பு விருது: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி,

கடினமான சூழ்நிலைகளில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி செய்யும் நல்ல மனப்பான்மை உள்ளவர்களுக்கு அரசாங்கம் விருது வழங்கி கவுரவிக்கும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இன்று உலகம் முழுவதும் சுற்றுலா நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புதுடெல்லியில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியொன்றில் மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் பட்டேல் தேசிய சுற்றுலா விருதுகளை அறிவித்தார்.

இதில் இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 76 விருதுகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாவது:

அடுத்த ஆண்டு முதல் ஒரு புதிய பிரிவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் பெரிய இடர்பாடுகளில் சிக்கிவிடுவார்கள். அவர்களை சிக்கிக்கொண்ட ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் நல்ல உள்ளமும் மனிதநேயமும் படைத்தவர்களை நாம் இனங்காண வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமின்றி அவர்களின் உடைமைகளை மீட்டுத் தருவது, இக்கட்டான நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற உதவிகளை நல்கும் நல்ல மனப்பான்மை கொண்டவர்கள் அடுத்த ஆண்டுமுதல் ஒரு சிறப்புப் பிரிவின்கீழ் மத்திய அரசின் சுற்றுலாத் துறையினால் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x