Published : 25 Sep 2019 08:38 PM
Last Updated : 25 Sep 2019 08:38 PM

இதற்கு முன் சிறைக்குச் சென்றதில்லை என்பதால் என்னைச் சிறையில் அடைத்தாலும் வரவேற்கிறேன்: கூட்டுறவு வங்கி முறைகேடு விசாரணை குறித்து சரத் பவார்

சர்க்கரை ஆலைகளுக்கு மராட்டிய கூட்டுறவு வங்கி, கடன் வழங்கியதில் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது, இது தற்போது விசாரிக்கப்பட்டு வருவதால் தன்னை சிறைக்கு அனுப்பினாலும் கவலையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சரத்பவாரின் உறவினரான அஜித்பவார் உள்ளிட்டோர் 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அந்த வங்கியின் இயக்குனர்களாக இருந்த காலகட்டத்தில், அவர்களுக்கு சாதகமாக கடன் ஒப்புதல் வழங்கி மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் சரத்பவார், அஜித்பவார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மும்பையில் பேட்டியளித்த சரத் பவார், “சிறைக்கு செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, சிறையில் அடைக்க வேண்டும் என்று சிலர் முடிவு செய்தால் அதனை வரவேற்கிறேன். இதற்கு முன் அந்த அனுபவம் இல்லை என்பதால் தான் மகிழ்ச்சியடைவேன்

வரும் 27 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று விளக்கம் அளிக்கவுள்ளேன், மத்திய அரசிடம் மண்டியிட்டு பழக்கம் இல்லை. அக்டோபர் 21 ஆம் தேதி மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது ஏன்?” என்று கூறினார் சரத் பவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x