Published : 25 Sep 2019 05:41 PM
Last Updated : 25 Sep 2019 05:41 PM

மிஸஸ் இந்தியா பட்டத்தை வென்றார் குஜராத்தைச் சேர்ந்த பூஜா தேசாய்

குஜராத்

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பூஜா தேசாய் என்ற இளம் பெண் இந்த ஆண்டுக்கான மிஸஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.
நாடு முழுவதும் இருந்து 4500 பெண்கள் போட்டியிட்டதில் பூஜா தேசாய் மிஸஸ் இந்தியா 2019 பட்டத்தை வென்றுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பூஜா தேசாய் தனது வெற்றி அனுபவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தப் போட்டி அவ்வளவு சுலபமானதாக இல்லை. இதற்காக தினமும் காலை 7.30 மணிக்கெல்லாம் போட்டியரங்குக்கு செல்ல வேண்டும். மதியம் 2 மணிவரை ஒய்யார நடைக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பல்வேறு கட்ட போட்டிகளுக்குப் பின்னர் முதல் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தேன்.

இறுதியாக பட்டத்தை வென்றிருக்கிறேன். ஒரு பெண்ணுக்கு இலக்குகள் இருந்தால் நேர மேலாண்மை இயல்பாகவே அமையும். இந்தியப் பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் புகுந்த வீடு, பிள்ளைகள் என தங்கள் அடையாளத்தைத் தொலைத்துவிடுகின்றனர். சுயத்தைத் தொலைக்காமல் அவர்கள் குடும்பத்தை பேணுவதை அறிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

பூஜா தேசாயின் குடும்பத்தினர் நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பூஜா தேசாய் இல்லத்தரசியாகவே இருக்கிறார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x