Published : 24 Sep 2019 08:03 PM
Last Updated : 24 Sep 2019 08:03 PM

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு

புதுடெல்லி,

இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும், மிகவும் உயரிய விருதான, 'தாதா சாகேப் பால்கே' விருது பாலிவுட் நடிகர் அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் நடிகர் அமிதாப்பச்சனுக்கு வயது 76 ஆகிறது. ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசுபத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய திரைப்படத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப்பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு தலைமுறைகள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய லெஜண்ட் அமிதாப் பச்சன், இவரை தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாகத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சியடைகிறோம். நாடு முழுதுமே இந்த முடிவை வரவேற்கின்றனர். அவருக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

முன்னதாக பழம் பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளார். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன்(1996) , இயக்குனர் பாலச்சந்தர்(2010) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

தாதா சாகேப் விருதுக்கு அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடிகர் வினோத் கன்னாவுக்கு அவர் மறைந்த பிறகு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சிறந்த நடிக்கருக்கான தேசிய விருதினை 4 முறை அமிதாப் பச்சன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x