Published : 22 Sep 2019 07:26 am

Updated : 22 Sep 2019 07:26 am

 

Published : 22 Sep 2019 07:26 AM
Last Updated : 22 Sep 2019 07:26 AM

யாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...?

economy-crisis

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் உள் ளது'. ‘அப்படியா...? இன்று முதல் நிறுவன வரி, 10% குறைவு. இனிமேல் பாருங் கள். துள்ளிக் குதித்து முன்னேறப் போகிறது நாடு'. கொக்கு தலை யில் வெண்ணெய் வைத்த கதைதான் இது. வளர்ச்சிக்கு எதிரான போக்கு நிலவுகிறது; என்ன செய்தால் நிலைமை சரியாகும்? நேரடியாக மக்களுக்குப் பயன் தரும் திட்டங்கள் வேண்டும். சாமானியர்களின் கையில் பணம் போய்ச் சேர வேண்டும்.


பொது மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டும். பணச் சுழற்சியை இலகுவானதாக மாற்ற வேண்டும். வறியவனின் கையில் நாலு காசு இருந்தால், ‘சுற்றிச் சுற்றி' வரும். வசதியானவர்களின் கணக்கில் கோடிகள் புரண்டாலும், சாமானியனுக்கு அது, ‘தம்பிடிக்கு உதவாது'.

கைத் தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறு, குறுந்தொழில்கள், உள்ளூரில் உள்ள சிறிய கடைகள், வணிகங்களில் புழங்கும் பணம், உடனடியாக சுழற்சிக்கு வந்து விடுகிறது. அதுவும், யார் வழியே அது சுழல்கிறது...? வண்டி இழுப்போர், சுமை தூக்குவோர், நாட்கூலிகள், நடைபாதை 'வியா பாரிகள்', உள்ளூர்த் தொழிலாளிகள், அவர்களின் பிள்ளைகள் மூலம் பணம் சுழன்று சுழன்று வந்து அத்தனை பேரையும் வாழ வைக் கிறது. அடி மட்டத்தில், அதிக அளவு பொருளாதார நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே, துடிப்புள்ள பொருளாதாரம் சாத்தியம் ஆகும்.

உள்ளூர் தேவைகள், உள்ளூர் தொழில்கள், உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் பொருளாதாரம் வலுவாக இருந்தால் அன்றி, ஒரு தேசத்தின் ஒட்டு மொத்தப் பொருளாதாரம் வலுவடையாது. என்னதான் ஆகப் பெரிய உலக வல்லரசுப் பொருளா தாரமாக இருந்தாலும், காந்தியக் கண்ணோட்டம் மட்டுமே, ‘சோறு போடும்'. இந்த உண்மை, உரிய இடத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஏனோ புரிவதாகவே இல்லை.

நிறுவன வரிக் குறைப்பு மூலம் நிரந்தரமாக ஒவ்வோர் ஆண்டும் அரசுக்கு வருவாய் இழப்பு, சுமார் ரூ.1,45,000 கோடி! ஒரு சிறிய கணக்கு. ஒரு சுயதொழில் தொடங்க ஒருவருக்கு 5 லட்சம் இருந்தால் போதும். 10 லட்சம் இருந்தால் அமோ கம். இந்தக் கணக்குப்படி, ஒரு கோடி ரூபாயில் குறைந்தபட்சம் 10 பேர் வேலை பெறுவார்கள். 1,45,000 கோடி ரூபாய்க்கு... 14,50,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். வரிக்குறைப்பு காரணமாக இத்தனை பணியிடங் கள் உருவாகும் என்று உத்தரவாதம் தர இயலுமா?

நிறுவனங்களின் ‘வளர்ச்சி' திட் டங்களுக்குப் போக, மீதம் இருந் தால், மனம் இருந்தால், பொது மக்களுக்கும் கிடைக்கலாம். ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' கதைதான். (புரிகிறதா...? நிறுவனங் கள்தாம் நெல்; மக்கள் வெறும் புல்தான்!!!)

இரு சக்கர, நான்கு சக்கர வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு, பொருளாதாரத் தேக்க நிலை மட்டுமேதான் காரணமா...? மூச்சுத் திணற வைக்கும் போக்கு வரத்து நெரிசல், குண்டும் குழியு மாய் மோசமான சாலைகள், பெருகி வரும் சாலை விபத்துகள், ‘மெட்ரோ ரயில்' போன்ற நவீன வசதிகள் ஆகியனவும், வாகன விற்பனைச் சரிவுக்கு நேரடிக் காரணங்கள். அரசுச் சலுகைகள் கிடைத்தால் மட்டுமே இத்துறையை தூக்கி நிறுத்த முடியும் என்பதான மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அதற்கான தீவிர முயற்சிகளிலும் அரசு ஈடுபடுகிறது.

யோசித்துப் பார்த்தோமா? ஒரே ஒரு வாகன விற்பனைத் தொகை கூட, சாமானியனுக்கு திரும்பி வரப் போவது இல்லை. இடை நிலை, கடை நிலை மனிதனின் பணம், வாகன உற்பத்தி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் போய் முடங்கி விடப் போகிறது. மீள்சுழற் சிக்கு உதவாத மக்கள் பணம் - வாகன உற்பத்தி, விற்பனையில் மிக அதிகம்.

மற்றொரு ‘திட்டம்' - மிகுந்த ஏமாற்றம் தருகிறது. ஏற்றுமதித் துறைக்கு வலு சேர்க்கும் விதத் தில், ‘வருடாந்திர ‘மெகா' சந்தைத் திருவிழா' நடைபெற இருக்கிறது. ஆபரணக் கற்கள், யோகா, சுற்று லாத் துறை, துணி மற்றும் தோல், கைவினைப் பொருட்கள் இத் திருவிழாவில் இடம்பெறும். ‘சந்தை', ‘தேவை' ஆகியன எல்லாம் இரண்டாம் பட்சம்.

‘உற்பத்தி' நிலையிலேயே பிரச் சினைகள் இருக்கின்றனவே... கைவினைஞர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து போய் இருக் கிறதே... குறு, சிறு தொழில்கள் அநேகமாக முற்றிலுமாக முடங் கிப் போய்விட்டனவே... விவ சாயம், மீன்பிடித்தல், கைத்தறி நெசவு போன்ற ஆதாரத் தொழில் கள் ஆபத்தான கட்டத்தில் உள்ள னவே... இங்கிருந்து தொடங்கி னால் மட்டுமே உள்நாட்டுப் பொரு ளாதாரம் மீண்டும் உயிர்த்தெழும்.

அடிமட்டப் பொருளாதார நிலை யைச் சரி செய்தால் அன்றி, ‘மேலே' நிலைமை சரியாகாது. ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் நூறு பேருக்கு வேலை கிடைக்கும்; ஆயிரம் கோடி ரூபாய் சலுகையில், ஆயிரம் பேர் பலன் பெறலாம். எது இப்போதைக்கு சிறந்தது...?

‘குறைந்த முதலீட்டில், நிறைந்த பயன், விரைவில் கிட்டும்'. இன்றைய நிலையில் இதுதான், மிகவும் உகந்த, 'மாதிரி' திட்டம்; இப் போதைய உடனடித் தேவை. பொரு ளாதாரத் தேக்க நிலையில் இருந்து மீள்வதற்கு உதவி கேட்டு பல்வேறு துறைகள், நிறுவனங்கள், முதலீட் டாளர்கள் அரசுகளின் கதவைத் தட் டத்தான் செய்வார்கள். அத்தனை பேரின் கோரிக்கைகளிலும் நியாயம் இருக்கவே செய்யும்.

யார் யாருக்கு முன்னுரிமை வழங்கலாம்? யார் யாருக்கு அது பயன் அளிக்கும்? முதலில் கவனிக்கப்பட வேண்டியவர் யார்? யாருடைய வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி இருக்கிறது? சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா?

முதலில், இந்திய சமுதாயத்தில் பெருவாரியான மக்கள் ஈடுபட்டு வருகிற ஆதாரத் தொழில்கள் நசிந்து விடாமல் பாதுகாப்போம். குறைந்த ஊதியம் ஆனாலும், அதிக எண் ணிக்கையில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் சிறு குறு ‘முதலாளிகள்' ஊக்க முடன் செயல்பட, வேண்டியது அனைத்தும் செய்வோம். நிறுவனங் கள் வேண்டும்தான். ஆனால், அவர் கள் சற்றே காத்து இருக்கட்டும். முன்னுரிமையில்தான் நாம் மாறு படுகிறோம்.

“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை”.

அவசரம் அற்றதை, நிதானமாகச் செய்யுங்கள்; உடனடிப் பணியை உடனடியாக ஆற்றுங்கள்.

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைEconomy crisisஇந்தியப் பொருளாதாரம்கைத் தொழில்கள்குடிசைத் தொழில்கள்குறுந்தொழில்கள்வண்டி இழுப்போர்சுமை தூக்குவோர்நாட்கூலிகள்நடைபாதை 'வியா பாரிகள்'உள்ளூர்த் தொழிலாளிகள்உள்ளூர் தொழில்கள்உள்ளூர் உற்பத்திஉள்ளூர் பொருளாதாரம்பொருளாதாரத் தேக்க நிலை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author