Published : 21 Sep 2019 09:33 AM
Last Updated : 21 Sep 2019 09:33 AM

அமலாக்கத் துறை சோதனையில் திரிணமூல் எம்.பி. வீட்டில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

புதுடெல்லி

ரியல் எஸ்டேட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கன்வர் தீப் சிங் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், ரூ.32 லட்சம் ரொக்கம் மற்றும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டன.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடி தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கன்வர் தீப் சிங் மீது அமலாக் கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி, சண்டி கர் ஆகிய நகரங்களில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங் களில் அமலாக்கத்துறை அதிகாரி கள் நேற்று சோதனை நடத்தினர். மேலும், கன்வர் தீப் சிங்குக்கு சொந்தமானதாக கூறப்படும் ‘அல் கெமிஸ்ட்' குழும நிறுவனங் களிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டது.

இதில், டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத் திலிருந்து, கணக்கில் வராத ரூ.32 லட்சம் ரொக்கம் மற்றும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.7.10 லட்சம்) பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவணங்கள் பறிமுதல்

அவரது அலுவலகத்தில் இருந்து இவ்வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் கைப் பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின் றன.

கொல்கத்தாவை தலைமை யகமாக கொண்டு செயல்பட்ட ‘அல் கெமிஸ்ட் டவுன் ஷிப் இண்டியா லிமிடெட்' என்ற நிறுவனம், தமது ஆயிரக்கணக்கான வாடிக்கை யாளர்களிடம் இருந்து சுமார் ரூ.1,900 கோடி பணத்தை முதலீடாக பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதன்பேரில், அமலாக்கத் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை அல் கெமிஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.238 கோடி மதிப் பிலான சொத்துகளை அமலாக் கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x