Published : 21 Sep 2019 09:30 AM
Last Updated : 21 Sep 2019 09:30 AM

பிற கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவி நிலைக்குமா?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சி சார்பில் அதன் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்கிறது. இவ்வாறு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்களது பதவி நிலைக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் அமையும் கூட்டணி களுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைமை வகிப்பது வழக்கமாக உள்ளது. இவர்கள் கூட்டணியில் உறுப்பினராகும் கட்சிகளின் வேட்பாளர் சிலருக்கு தமது கட்சி சின்னத்தில் போட்டியிட தலைமை வகிப்பவர் கள் வலியுறுத்துவது உண்டு. இதன் பின்னணியில் அந்த சிறிய கட்சி பலம் பெற்று விடக் கூடாது எனவும், அந்த வேட்பாளர் எதிர் காலத்தில் தம்மை விட்டு விலகக் கூடாது என்பதும் முக்கிய நோக் கங்களாக உள்ளன. இதுபோன்ற வேட்பாளர்களில் பலசமயம் சிறிய கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இடம்பெற்று விடுகிறார்கள். ஆனால், இவர்களின் வேட்புமனுக்கள் மீது வேறு கட்சி கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்ப தில்லை. இதற்கு அக்கட்சிகளுக்கும் சிலசமயம் இதுபோல் போட்டியிடும் நிலை ஏற்பட்டு விடுவது காரணமாக உள்ளது.

பொதுநல வழக்கு

வெற்றி பெற்றவர்கள் சட்டப் பேரவை மற்றும் மக்களவையில் மட்டும் தாம் வெற்றி பெற்ற கட்சி களின் உறுப்பினர்களாக செயல் படுகிறார்கள். வெளியே வந்தபின் அதுபோல் இன்றி சிலர் தமது கட்சிகளை சேர்ந்தவர்களாக அதன் மேடைகளில் பேசுவதும், பத்திரிகைகளில் அறிக்கை அளிப் பதும் தொடர்கிறது. இந்த நட வடிக்கையை குறிப்பிட்டு முதன் முறையாக உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் சொல்வது என்ன? என்பது குறித்தும், அவ்வாறு வெற்றி பெற்றவர்களின் பதவி நிலைக்குமா? என்பது குறித்தும் ‘இந்து தமிழ்’ நாளேட்டின் விசாரிப்பிற்கு மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பல்வேறு தகவல் கிடைக்கின்றன.

இதன்படி, வேறு கட்சி சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின் அவரது தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யலாம். இந்தப் புகாரில் அந்த வேட்பாளர் தொடர்ந்து தம் கட்சியின் பெயரை கூறி வாக்கு சேகரிப்பது, பிரச்சாரம் செய்வது போன்றவற்றில் ஆதாரங்கள் சமர்ப் பிக்க வேண்டும். இந்த மனுக்கள் தேர்தல் அதிகாரியால் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

இதன் மீதான புகார்கள் அப் போது வராவிட்டாலும், அவர்கள் வெற்றி பெற்ற 45 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கலாம். அப்போதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ரத்தாக வாய்ப்புகள் உள்ளன. இதே 45 நாட்களுக்குள் நேரடியாக உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் மனுவாக அளித்து வழக்கு தொடுக்கலாம். இதை நீதிமன்றம் விசாரித்து, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும். அதேசமயம், இதை பொதுநல வழக்காக நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க முடியாது என தேர்தல் ஆணையத்தின் சட்டங்கள் குறிப்பிடுவதாக தகவல் கிடைக்கிறது.

தற்போது, மக்களவை தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலான நிலையில் தேர்தல் ஆணையத்தின் பொறுப்புகள் முடிந்துவிட்டன. இதனால் அவர்கள் பதவிகளை நேரடியாகப் பறிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது.

சபாநாயகர்கள் முடிவு

தற்போதைய சூழலில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் மீது அவர் களது சட்டப்பேரவை மற்றும் மக்களவையின் சபாநாயகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் சக உறுப்பினர்கள் அல்லது பிறகட்சிகள் புகார் அளிக்கலாம். அதன் மீது சபாநாயகர்கள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் பதவிகளும் ரத்து செய்யப்படும் ஆபத்துக்களும் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

இதனிடையே, உத்தரபிரதேசத் தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் மாநில சட்டப்பேரவை சபாநாயகரிடம் கடந்த வாரம் ஒரு புகார் அளித் துள்ளார்.

அதில், தனது சித்தப்பாவும் பிரகதிஷீல் சமாஜ்வாதி(லோகியா) கட்சியின் தலைவருமான ஷிவ்பால்சிங் யாதவின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கு அவர் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு தொடர்ந்து தன் புதிய கட்சி கூட்டங்களில் கலந்துகொள்கிறார் என்றும், அறிக்கைகள் வெளியிடுகிறார் எனவும் பல புகார்களை ஆதாரங் களுடன் அடுக்கியுள்ளார். இவர் தம் கட்சியில் மீண்டும் இணைவார் என்ற நம்பிக்கை இழந்த அகிலேஷ், இந்தப் புகாரை உ.பி. சட்டப்பேரவை சபாநாயகரிடம் தற்போது அளித்துள்ளார். இதனால் தம் பதவி போவது உறுதி என அறிந்த ஷிவ்பால், முன்தேதியிட்ட ராஜினாமா கடிதம் அளித்து விட்டார்.

தனது ஜஸ்வந்த்நகர் தொகுதி யில் மீண்டும் போட்டியிடத் தயார் எனவும் அவர் அறிவித் துள்ளார். இவ்விரு கடிதங்களும் சபாநாயகர் முடிவுக்காகக் காத்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x