Published : 16 Sep 2019 10:40 AM
Last Updated : 16 Sep 2019 10:40 AM

மொழியின் பெயரில் புதிய போர்க்களம்: அமித் ஷாவுக்கு கேரள முதல்வர் கண்டனம்

திருவனந்தபுரம்

மொழியின் பெயரில் புதிய போர்க் களம் தொடங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜ யன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தி தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தேசிய அளவில் பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே மொழி இந்தி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். இந்தி நாட்டை ஒருங்கிணைக்கும் என்று அவர் கூறுவது அபத்தமானது. சங் பரி வார் அமைப்புகள் மொழியின் பெயரால் புதிய போர்க்களத்தை தொடங்குகின்றன.

நாட்டின் பெரும்பான்மை மக் களின் தாய் மொழி இந்தி கிடை யாது. தெற்கு, மேற்கு, கிழக்கு பகுதி மக்கள் இந்தி பேசவில்லை. இந்தியை முன்னிலைப்படுத்துவது தாய்மொழியை புறந்தள்ளுவதற்கு சமமாகும். உண்மையான பிரச் சினைகளில் இருந்து மக்களின் கவ னத்தை திசை திருப்ப மொழி பிரச் சினையை சங் பரிவார் அமைப்பு கள் கையிலெடுத்துள்ளன. இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும் போது, "தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி திட்டத்தால் நாட்டில் பிரிவினையைத் தூண்ட வேண் டாம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x