Published : 15 Sep 2019 11:29 AM
Last Updated : 15 Sep 2019 11:29 AM

காஷ்மீர் நிலவரம் : தேசிய குழந்தைகள் நல உரிமைகள் குழுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் மனு

செப்.14, 2019 புகைப்படம். ஸ்ரீநகரில் மூடப்பட்ட கடைகளின் ஒருபகுதி. | பிடிஐ.

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகே குழந்தைகள் அங்கு ‘சட்ட விரோதமாக’ கைது செய்யப்படுவதாக குழந்தைகள் நல உரிமைகளுக்கான தேசிய கமிஷனின் தலைவர் ஷாந்தா சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

காஷ்மீரில் சட்டவிரோதமாக குழந்தைகள் கைது செய்யப்படுவது பற்றி ஊடகங்களின் செய்திகளைச் சுட்டிக்காட்டி இந்த மனுதாரர்கள் நீதித்துறை தலையீடு கோரியுள்ளனர். இது தொடர்பாக நிலையறிக்கை கேட்க வேண்டும் என்றும் ஜம்மு கஷ்மீர் சிறார் நீதிக்க்குழு அங்கு நடக்கும் கைது நடவடிக்கைகளை கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும் என்று தங்கள் மனுவில் உச்ச நீதிமன்றத்தை வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் நிலைமை தொடர்பாக 12-க்கும் மேற்பட்ட மனுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மனுக்களில் 2 முக்கிய விவகாரங்கள் பிராதனப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று, சிறார்களை சட்ட விரோதமாக கைது செய்வது, குழந்தைகளுக்கு காயங்கள், மற்றும் குழந்தைகளின் மரணங்கள் ஆகியவை பற்றி இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறார் நீதிக்குழு மூலம் 18 வயதுக்குட்பட்டொர் கைது நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய அனைத்து போலீஸ் நிலையங்களின் கைது விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அதே போல் சட்ட விரோதமாக சிறார்கள் கைது செய்யப்பட்டால் அல்லது மரணங்கள் நிகழ்ந்திருந்தாலோ அந்தக் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக வழிகாட்டுதல் கோரியும் இந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x