Published : 14 Sep 2019 08:58 AM
Last Updated : 14 Sep 2019 08:58 AM

உ.பி.யில் அமைச்சர்களை ஏழைகளாக கருதி 1981 முதல் வருமான வரி செலுத்தும் அரசு

லக்னோ

உ.பி.யில் வி.பி.சிங் முதல்வராக இருந்தபோது கடந்த 1981-ம் ஆண்டு உத்தரபிரதேச அமைச்சர் களின் சம்பளம் மற்றும் பிற படிகள் தொடர்பான சட்டம் இயற்றப் பட்டது. இதற்கு சட்டப்பேரவையின் அனுமதி கோரி அப்போதைய முதல்வர் வி.பி.சிங் பேசும்போது, “அமைச்சர்களில் பெரும்பாலா னோர் ஏழை பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களின் வருமான வரிச் சுமையை அரசே ஏற்கும்” என்றார்.

இந்த சட்டத்தின் ஒரு பிரிவில், “ஒவ்வொரு அமைச்சருக்கும் அவரது பதவிக் காலம் முழுவதும் மாதச் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுபோல் துணை அமைச்சர்களுக்கு ரூ.650 வழங்கப்படும். இந்த சம்பளம் வருமான வரி நீங்கலாக இருக்கும். அந்தந்த காலத்தில் நடைமுறையில் இருக்கும் வருமான வரி சட்டத் தின் கீழ் வருமான வரியை மாநில அரசே ஏற்கும்” என்று கூறப்பட் டுள்ளது.

உ.பி.யில் 1981-ல் இந்த சட்டம் இயற்றப்பட்டது முதல் 19 முதல்வர் கள், சுமார் 1000 அமைச்சர்களை அம்மாநிலம் சந்தித்துள்ளது. காங் கிரஸ் கட்சியின் வி.பி.சிங், என்.டி.திவாரி, சமாஜ்வாதி கட்சி யின் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, பாஜகவின் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் என முதல்வர் கள் பட்டியல் நீள்கிறது.

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசும் கடந்த 2 ஆண்டுகளாக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான வரியை செலுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த நிதியாண்டில் ரூ.86 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. 1981-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் இத்தொகை செலுத்தப்பட்டுள்ள தாக உ.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சீவ் மிட்டல் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் 1981-ல் இந்த சட்டம் இயற்றப்பட்டபோது அமைச்சர்கள் ஏழைப் பின்னணியில் இருந்திருக் கலாம். தற்போதும் அவ்வாறு உள்ளனரா என்ற கேள்வி எழு கிறது. தற்போது எம்எம்ஏக்கள், அமைச்சர்களில் பெரும்பாலா னோர் கோடீஸ்வரர்களாக இருப் பது, அவர்கள் தேர்தலின்போது தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத் தின் மூலம் தெரியவருகிறது. எனவே தற்போதும் முதல்வர், அமைச்சர்களுக்கான வருமான வரியை மக்களே எற்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x