Published : 11 Sep 2019 09:06 AM
Last Updated : 11 Sep 2019 09:06 AM

பாக்.-சீனா கூட்டறிக்கையில் காஷ்மீர் பற்றி குறிப்பிடுவதா?- இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

புதுடெல்லி

பாகிஸ்தானும் சீனாவும் சமீபத் தில் வெளியிட்ட கூட்டறிக்கை யில் காஷ்மீர் பற்றி குறிப்பிடப் பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அந்நாட்டு அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் இரு நாடுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக் கையில் காஷ்மீர் பிரச்சினைக்கு பாகிஸ்தானும், இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறும் போது, “சீனா-பாகிஸ்தான் வெளி யிட்ட கூட்டறிக்கையில் காஷ்மீர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது கண் டிக்கத்தக்கது. காஷ்மீர் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி. இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது.

மேலும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத் துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனெனில், இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ் தான் 1947-ல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது. அந்தப் பகுதி வழியாக இந்த திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x