Published : 10 Sep 2019 11:30 AM
Last Updated : 10 Sep 2019 11:30 AM

காஷ்மீரில் அச்சுறுத்தும் போஸ்டர்களை ஒட்டிய லஷ்கர் தீவிரவாதிகள் 8 பேர் கைது

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து விநியோகித்த குற்றத்துக்காக லஷ்கர் தீவிரவாதிகள் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கே பல பகுதிகளிலும் ராணுவ குவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளும் அமலில் உள்ளன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சோப்போர் மாவட்டத்தில் பழக்கடைக்காரர் ஒருவரின் குடும்பத்தினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், சோப்போர் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி அரசுக்கு எதிராக செயல்படத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், துண்டு பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அய்ஜாஸ் மிர், ஒமர் மிர், தவ்ஸீப் நஜார், இம்தியாஸ் நஜார், ஒமர் அக்பர், ஃபைசான் லதீஃப், டேனிஷ் ஹபீப், சவுகத் அகமது மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

" />

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x