Published : 10 Sep 2019 11:29 AM
Last Updated : 10 Sep 2019 11:29 AM

சந்திரயான்-2: விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி: இஸ்ரோ விளக்கம்

பெங்களூரு
சந்திரயான்- 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடன் இன்னமும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயன்று கொண்டு இருக்கிறோம் என இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு வந்தார்.
அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர். சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை, தரையிறங்கும் முன்பாக திடீரென லேண்டருடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இஸ்ரோ தலைவர் சிவன் ‘‘சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் லேண்டர் விக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனாலும், இன்னும் லேண்டருடனான தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை . தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என அறிவித்தார்.
எனினும் லேண்டரில் இருந்து சிக்னல் பெறும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை கண்டறிந்துள்ளது. விக்ரம் லேண்டருடன் இன்னமும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயன்று கொண்டு இருக்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x