Published : 08 Sep 2019 08:25 AM
Last Updated : 08 Sep 2019 08:25 AM

காஷ்மீரின் 92.5% பகுதியில் கட்டுப்பாடு நீக்கம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரின் 92.5 சதவீத பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதன்காரணமாக ஜம்மு-காஷ்மீரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் 92.5 சதவீத பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 10 இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது. தரைவழி தொலைபேசி சேவை முழுமையாக செயல்படுகிறது. காஷ்மீரின் வளர்ச்சியை கருத்திற் கொண்டே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருக்கிறது என்பதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிறப்பு அந்தஸ்தை பயன்படுத்தி சில அரசியல் தலைவர்கள் ஊழலில் திளைத்து வந்தனர். அவர்கள் மட்டுமே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்க்கின்றனர்.

காஷ்மீரில் ராணுவம் அத்துமீறி செயல்படுவதாக கூறுவது முற்றி லும் தவறு. மாநில போலீஸாரும் மத்திய பாதுகாப்பு படைகளும் மட்டுமே சட்டம், ஒழுங்கை பராம ரிக்கின்றன. தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே ராணுவம் போரிட்டு வருகிறது.

காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்ட பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 230 பாகிஸ்தான் தீவிரவாதி கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஊடுருவ காத்திருக்கின் றனர். இதில் சிலர் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக் கிறோம். பாகிஸ்தான் தீவிரவாதி களிடம் இருந்து காஷ்மீர் மக்களை பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள் ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து சங்கேத மொழியில் 2 தீவிரவாதிகளிடம் பேசிய உரையாடலை இடைமறித்து கேட்டோம். அதில், தீவிரவாதிகள் தங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றும் அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றால் வளையல்கள் அனுப்பப்படும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தீவிரவாதத்தின் மூலம் காஷ்மீ ரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. வன்முறையைத் தூண்டும் வகையில் வதந்திகளை பரப்பி வருகிறது. இதே அணுகுமுறையை பாகிஸ்தான் கடைப்பிடித்தால் அதற்கு நிரந்தர தீர்வு காணப் படும். ஆனால் இதுதொடர் பான வியூகங்களை இப்போது வெளிப்படையாகக் கூற முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, "காஷ்மீரில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக நடைபெற்றது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x