Published : 04 Sep 2019 11:52 AM
Last Updated : 04 Sep 2019 11:52 AM

தெலங்கானா கிராமங்களை மேம்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவின் 30 நாள் திட்டம்

ஹைதராபாத்,

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிராமங்களின் தரத்தை உயர்த்த அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் 30 நாட்கள் செயற்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

அதன்படி,
1. கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட அனைத்து அரசுக் கட்டிடங்களும் சுத்தம் செய்தல்.
2. சாக்கடைகளை சுத்தம் செய்தல், சீரமைத்தல்.
3. தேங்கிய நீரை வெளியேற்றுதல்.
4. ட்ராக்டர்கள் மூலம் செடிகளை கிராமத்துக்கு கொண்டு செல்லுதல், குப்பைகளை அகற்றுதல்.
5. கிராமங்களில் குப்பைகளை தேக்கி வைக்க சரியான நிரந்தர இடத்தைத் தேர்வு செய்தல்.
6. கிராமங்களில் நிரந்தரமாக தோட்டம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல்.
7. பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

30 நாட்கள் செயற்திட்டத்தில் 7 நாட்கள் மின்சாரம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்குகிறது. மேலும், மத்திய நிதி தொகுப்பிலிருந்து, கிராம பஞ்சாயத்து பொது வரி நிதியிலிருந்தும் நிதி திரட்டி பயன்படுத்தப்படும். கூடவே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தும் சிஎஸ்ஆர் அடிப்படையில் நிதி திரட்டி கிராமங்களை மேம்படுத்தும் செயற்திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

இதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட 100 பறக்கும் படைகள் அமைக்கப்படுவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
30 நாட்களில் அரசின் இலக்குகளை எட்டும் கிராமங்களுக்கு பரிசுகளும் நிறைவேற்றாத கிராமங்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x