Published : 04 Sep 2019 09:58 AM
Last Updated : 04 Sep 2019 09:58 AM

ஆளும் கட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திராவில் குறை தீர் முகாம்: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

என். மகேஷ்குமார்

அமராவதி 

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட் டம், அரண்டல் பேட்டா எனும் இடத் தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங் கிரஸ் கட்சியினரால் பாதிக் கப்பட்டோருக்கான குறைதீர் முகாமை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல் வருமான சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த மூன்றரை மாதங் களில் மாநிலத்தில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

இதுவரை தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 7 தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளன.

உங்களுக்கு தைரியம் இருந்தால் என் மீது தாக்குதல் நடத்துங்கள். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 11 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிலர் மீது வன்கொடுமை வழக்குகளும் பதிவாகி உள்ளன.

தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களித்தற்காக ஒரு கிராமத்தை காலி செய்ய வேண்டி அங்குள்ள மக்களை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் மிரட்டி உள்ளனர். மற்றொரு கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஊருக்குள் வராதபடி சாலையின் நடுவே சுவர் எழுப்பி உள்ளனர். இத்தனை அராஜகத்தையும் போலீ ஸார் பார்த்துக் கொண்டு நட வடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? ஆட்சிகள் மாறும். அப்போது கட்சிகள் மாறும்.

எனவே போலீஸார் எப் போதுமே நியாயத்தின் பக்கம்தான் நிற்க வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

தமிழிசைக்கு பாராட்டு

தமிழகத்தின் பாஜ தலைவ ராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும், இமாச்சலபிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப் பட்ட பண்டாரு தத்தாத்ரேயாவுக் கும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து களை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x