Published : 02 Sep 2019 02:08 PM
Last Updated : 02 Sep 2019 02:08 PM

சந்திரயான் - 2 ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாகப் பிரிந்தது: ஐ.எஸ்.ஆர்.ஓ.

பெங்களூரு, பிடிஐ

சந்திரயான் - 2- ஆர்பிட்டரிலிருந்து ‘விக்ரம்’ லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

12.45 மணிக்குத் தொடங்கிய இந்த ‘விக்ரம்’ பிரிப்பு சுமார் அரைமணிநேரத்தில் 1.15 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேறியது. “ஆம் விக்ரம் லேண்டர் பிரிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேறியது” என்று ஐ.எஸ்.ஆர்.ஓ. அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் - 2 விண்கலத்தின் இறுதி மற்றும் 5வது கட்ட நீள்வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஞாயிறன்று மேற்கொண்டனர்.

இதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119கிமீ தொலைவையும் அதிகபட்சம் 127 கிமீ தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடுத்தகட்டமாக சந்திரயான் - 2 விண்கல ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டரைப் பிரிக்கும் நடவடிக்கை மதியம் வெற்றிகரமாக நிறைவேறியதாக ஐஎஸ்ஆர்ஓ தெரிவித்துள்ளது.

விக்ரம் மூன் லேண்டர் என்ற பெயர் இந்திய விண்வெளி ஆய்வு தந்தையாகக் கருதப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. இது சந்திரனின் மேற்புறத்தை தென் துருவத்தில் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லேண்டரிலிருந்து பிரக்யான் சந்திரனின் மண்ணில் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறது, குறிப்பாக நீர் மற்றும் கனிமவளங்கள் இருப்பு குறித்து இது கண்டறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x