Published : 01 Sep 2019 10:07 AM
Last Updated : 01 Sep 2019 10:07 AM

ஹரியாணாவில் பசு மாடுகளுக்கு தங்கும் விடுதி: நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசின் மானியத்தொகையில் அமைகிறது

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

நாட்டிலேயே முதன்முறையாக சகலவசதிகளுடன் பசுமாடுகளுக்கு தங்கும் விடுதி தொடங்கப்பட உள்ளது. இது ஹரியாணா மாநிலத் தில் அம்மாநில அரசின் மானியத் தொகையுடன் அமைய உள்ளது.

தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அனைத்து வகை வசதிகளுடன் தங்கும் விடுதிகள் மனிதர்களுக்கு இருப்பதை பார்த்திருக்கிறோம். இதுபோல், சகலவசதிகளுடன் பசு மாடுகளுக்கும் தங்கும் விடுதி ஹரியாணா மாநிலம் அம்பாலா வின் உக்ரா கிராமத்தில் அமைந்து வருகிறது. நாட்டின் முதன்முறை யாக அமையும் இந்த பசுமாடுகளின் விடுதிக்கு அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மானியம் அளிக்க வும் முன்வந்துள்ளது.

இது ஹரியாணாவுக்கு மட்டும் அன்றி அனைத்து மாநிலங்களும் முன் உதாரணமாக ரூ.19 கோடி செலவில் அமைய உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உக்ரா கிராமத்தின் பஞ்சாயத்து பெண் தலைவரான ஹரிந்திரா கவுர் கூறும்போது, ‘எனது கணவருடன் குஜராத்தின் சில கிராமங்களுக்கு சென்றிருந் தேன். அங்கு பசுமாடுகளை பரா மரிக்கப்படும் முறையை ஒருங் கிணைத்து இந்த விடுதி யோச னையை அமலாக்கத் திட்டமிட் டோம். இதற்கு கிராமத்தினரும் சம்மதித்தனர்’ என்றார்.

இதை தொடர்ந்து உக்ரா கிராமத் தினர் சுமார் 19 ஏக்கர் நிலத்தையும் விடுதிக்காக ஒதுக்க முன் வந்துள்ள னர். இந்த திட்டம் பற்றி பத்திரிகை கள் வாயிலாகக் கேள்விப்பட்ட முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு தாமாக முன்வந்து இந்தத் திட்டத்துக்கு மானியத்தொகையையும் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக 19 ஏக்கர் நிலத்துக்கு மதில் சுவர் ரூ.92 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் பணிகளை ஆய்வு செய்வற் காக சென்ற ஹரியாணா முதன்மை செயலாளர் சுதீர் ராஜ்பால் நேரில் கண்டு வியந்துள்ளார்.

எருமைகளும் விருந்தினர்களாக தங்க வைக்கப்பட உள்ள இந்த விடுதியில் வறுமைகோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு சொந்த மான பசுமாடுகள் கட்டணமின்றி இலவசமாக பராமரிக்கப்படும். கட்டணங்களுடன் தங்கவைக்கப் படுபவைகளிடம் அதில் அறுபது சதவிகித தொகையை பாலாகக் கறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அந்த விருந்தினர் மாளிகை சார்பில் பால், தயிர், வெண்ணெய், பன்னீர் மற்றும் நெய் ஆகிய உணவுப்பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக தனியாக நவீன தொழில்நுட்பத்தில் ஒரு ஆலை மற்றும் பால் பொருட் களுக்கான குளிர்சாதன வசதி களும் அதனுள் அமையும். காளை மாடுகளுக்கும் விடுதியில் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட அம்பாலா வின் சுற்றுப்புறம் உள்ள ஹரியாணா வாசிகள் இப்போதே தங்கள் பசு, காளை மற்றும் எருமைகளை தங்க வைக்க முன்பதிவு செய்யத் துவங்கி விட்டனர். இவர்களிடம் ரூ.200 பெற்று முன்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமது பசுமாடு களுக்கு தனியாக அறை ஒதுக்கி தங்க வைக்க விரும்புவோரிடம் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி, கூலர் மற்றும் மின்விசிறி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த விடுதியில் தன் கால் நடைகளை 24 மணி நேரமும் தங்கள் கைப்பேசிகள் வழியாக அதன் உரிமையாளர்கள் கண்காணிக்கும் வசதியும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக அந்த வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படும். கால்நடை மருத்துவர் களும் அந்த விடுதியில் நிரந்தர மாகப் பணியமர்த்தப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x